உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

காவல்துறை பற்றி

என்பதை மாத்திரம் நான் அந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்வேன்.

அதிகாரிகளை மாற்றுவதைப் பற்றியெல்லாம் சொன்னார்கள். நல்ல அதிகாரிகளை மாற்றிவிடுகிறீர்கள்; தீய அதிகாரிகளை மாற்றாமல் விட்டு விடுகிறீர்கள் என்ற கருத்தை கே. டி. கே. தங்கமணி அவர்கள் சொன்னார்கள். செழியன் அவர்கள் இஷ்டப்படி ஆளுங்கட்சி சொல்கிற நேரத்தில் எல்லாம் அதிகாரிகளை மாற்றுகிறார்கள் என்று சொன்னார்கள். ஆகவே, மாற்றுவது என்ற கொள்கையை நாம் அனைவரும் ஒத்துக் கொண்டிருக்கிறோம். இதிலே நல்லவர்கள் யார், தீயவர்கள் யார், என்பதிலேதான் - தீர்மானிக்கும் நேரத்தில்தான் நமக்குள்ளே அபிப்பிராய பேதம் வருகிறதே தவிர, நல்லவர்களாக இருந்தால் திருக்கலாம், தீயவர்களாக இருந்தால் மாற்றலாம் என்கிற அந்தக் கொள்கையை ஏதோ ஒரு வகையில் எதிர்க்கட்சியின் சார்பாக பேசியவர்கள் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏதோ ஆளுங் கட்சியின் சார்பில் ஆயிரக்கணக்கில் சிபாரிசுகள் தருகிறார்கள் என்று சொன்னார்கள். செழியன் அவர்கள் கூட ஆளுங் கட்சியிலே இருந்தபோது சிபாரிசுகளைக் கொடுக்க வில்லையா? எவ்வளவோ கொடுத்தார்கள். கோட்டால் தரலாம் என்று என்னிடத்திலே கூட வைத்திருக்கிறேன். இவ்வளவு கடிதங்களை (அவையில் காண்பித்து) செழியன் அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களுக்காகக் கொடுத்தவைதான்.

திரு. கோவை செழியன் : பேரவைத் தலைவரவர்களே, நான் ஆளுங் கட்சியிலே இருந்தபொழுது கொடுத்திருக்கிறேன். எப்பொழுது கொடுத்திருக்கிறேன் என்றால், என்னுடைய தொகுதி யிலே இருக்கிற அதிகாரிகளை வேறு யாராவது தலையிட்டு மாற்றுகின்றபொழுது அல்லது தலையிடுகின்றபொழுது, நான் அவைகளைத் தடுக்கச் சொல்லியிருக்கிறேன். ஆனால், நானாக அவரை மாற்று, இவரை மாற்று, எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னது கிடையாது

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நீங்கள் நிறையக் கொடுத்தீர்கள், கொடுத்த எல்லாவற்றையும் நான் செய்தேனா என்று கேட்கிறேன்.