24
காவல்துறை பற்றி
மந்திரிகளுடைய வருகையின் போது போலீஸாருக்கு ஏற்படும் தொல்லைகள் எடுத்துச் சொல்லப்பட்டன. இங்கே கொடுத்திருக்கக் கூடிய இந்த மான்யங்களைப் படித்துப் பார்க்கும் நேரத்தில் மாவட்டங்களுடைய செயற் படை வீரர்களுக்கு ஆகக் கூடிய செலவு 1961-62-ம் ஆண்டில் 429.27 லட்சமாக இருந்தது 1962-63-ம் ஆண்டிலே 447.75 லட்சமாக உயர்ந்திருக்கிறது. இந்த உயர்வு ஏன் என்று நான் கேட்கவில்லை. பஞ்சப்படி உயர்வினால் இந்த அளவுக்குச் செலவு உயர்ந்திருக்கலாம் என்று எடுத்துக் கொள்கிறேன். ஆனால் மலபார் போலீஸூக்கு 1961-62-ல் 18.68 லட்சமாக இருந்தது 1962-63-ல் 32.86 லட்சமாக ஏன் உயர்ந்தது என் எனக்குப் புரியவில்லை. எந்த விதமான கட்சி குழப்பங்களும் அராஜகங்களும் நாட்டில் ஏற்படாத சூழ்நிலையில் இந்த அளவுக்கு உயருவதற்குக் காரணம் என்ன என்ன என்று பார்க்கும்போது, கொடுக்கப்பட்டுள்ள குறிப்பில் மோட்டார் வாகனங்கள் வாங்குவதற்காக அதிகச் செலவு ஏற்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது. இவ்வளவு அவசரமாக மோட்டார் வாகனங்கள் ஏன் வாங்கப்பட்டன? அஸ்ஸாமில் கலகத்தைத் தடுப்பதற்காக நமது படை வீரர்கள் அழைக்கப்பட்டார்களே, அதற்காக வாங்கப்பட்டதா? அனுப்பப்பட்ட இந்த மாநில போலீஸாருடைய செலவை மத்திய சர்க்கார் ஏற்றுக்கொண்டதா? மாநில சர்க்கார் ஏற்றுக்கொண்டதா? மாநில சர்க்கார் ஏற்றுக் கொண்டிருந்தால், மாநில சர்க்கார் ஏற்றது சரிதானா? அஸ்ஸாம் கலவரத்தைத் தடுப்பதற்காக அனுப்பப்பட்ட காரணத்தினால் மத்திய சர்க்கார் ஏற்றுக்கொண்டிருக்கவேண்டாமா? இந்தக் கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.
அமைச்சரிடத்திலிருந்து
போலீஸார் கஷ்டங்களை எடுத்துக் கூறி அவர்களுக்காக நாங்கள் வாதாடுவதால், போலீஸ்காரர்களை எதிர்க் கட்சிக் காரர்கள் தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறார்கள் என்று பொதுவாக ஒரு கருத்து ஆளும் கட்சியிலிருந்து தெரிவிக்கப் பட்டது. அமைச்சர் அவர்கள்கூட அப்படித்தான் எண்ணுகிறார் என்று கருதுகிறேன்
கனம் திரு. கு. காமராஜ் : அப்படி நினைக்கவில்லை. நீங்கள் போலீஸ்காரர்களை மிரட்டுகிறீர்கள். எப்படி