உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

251

கு

முஸ்லிம் வீக்கைச் சேர்ந்தவர்களும் கொலைக்கு ஆளாகிறார்கள்; கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களும் கொலைக்கு ஆளாகிறார்கள். எப்படியிருந்தாலும்கூட நான் எடுத்துச் சொல்கின்ற பொதுவான கருத்து, பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு வன்முறையை ஒரு கருவியாகப் பயன்படுத்து வதை இந்த அரசோ அல்லது ஆளுங் கட்சியாக இருக்கிற தி.மு. கழகமோ அனுமதிக்கவில்லை. ஆதரிக்கவில்லை என்பதை மாத்திரம் நான் இங்கே எடுத்துக் கூறப் பெரிதும் கடமைப்பட் டிருக்கிறேன். இருந்தாலும் இதை நீண்டகாலமாக எல்லாத் தலைவர்களும் எடுத்துச் சொன்னாலும் கூட இடையிலே சில காரியங்கள் நடைபெற்று விடுகின்றன.

வெங்கா தாக்கப்பட்டது பற்றிச் சொன்னார்கள். இன்னும் என்ன செய்கிறது அரசு என்று கேட்டார்கள். அரசு புலன் விசாரித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். கமிஷனர் அலுவலகத்தில் தவறான நம்பர்கள் பொறிக்கப்பட்ட 20, 30 கார்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். அந்தக் கார்கள் எல்லாம் கள்ளக் கடத்தல் கார்கள்; கொள்ளை அடிக்கப் பயன்பட்ட கார்கள். ஆனால், அதிலே இருக்கிற நம்பருக்கும் அந்தக் காருக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை. இப்படி அந்த டிரைவர் கைது செய்யப்பட்ட போது கூட, 'நான் அந்தப் பக்கமே வரவில்லை' என்று சொன்ன தாகவும் இருந்தாலும். மேலும் புலன் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும், போலீஸ் அதிகாரிகள். கமிஷனர் அவர்கள் எனக்கு எடுத்துத் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே அதை அப்படியே விட்டு விட்டோம் என்ற நினைக்கத் தேவையில்லை.

சேலத்தில் நடைபெற்ற கொலைபற்றி எடுத்துச் சொல்லப் பட்டது. அதுபற்றியும் புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டு பேர்கள் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். அதற்குள் வழக்கு தாக்கல் செய்யப்படாதற்குக் காரணம் இன்றும் புலன் விசாரணை முடிவடையவில்லை.

குசேலர் கேசில் 'பொலிடிகல் மோடிவேஷன்' (அரசியல் தூண்டுதல்) என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று கே. டி. கே. சொன்னார்கள். நான் பிறகு அந்த ஜட்ஜ்மெண்டை வாங்கிப்