உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

255

போன்றவர்களே இப்படிப் இப்படிப் பேசினால், அரசியலில் இளவெட்டுக்களாக இருப்பவர்கள் எந்த அளவிற்குப் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பதற்காகத்தான் சொல்கிறேன். உருக்கத்தோடு ஒவ்வொரு அரசியல் தலைவர்களும் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்பதற்காகச் சொல்கிறேன்.

ஹாண்டே அவர்கள் காவல் துறையில் வறட்சி நிவாரண நிதி கட்டாயமாக வசூலிக்க வேண்டுமென்று ஒரு ஆர்டர் போயிருப்பதாகச் சொன்னார்கள். அதில் நான் உன்னிப்பாக கவனித்தேன், அதிலே "I appeal to all member of the Police of Department executive and ministerial including last grade servants to eontribute voluntarily one day's salary." என்றுதான் இருக்கிறது. அதிலே 'வாலண்டிரி' அதாவது அவர்களாக முன்வந்து தரவேண்டுமென்று இருக்கிறதே தவிர, 'கம்பல்சரி' என்று இல்லை. இவ்வளவு சூட்டிற்குப் பிறகு தீயணைப்பு இல்லாவிட்டால் நன்றாக இருக்காது.

டாக்டர் எச். வி. ஹாண்டே : திண்டுக்கல் ஆர். டி. ஓ. என்குயரி கேஸ் பற்றிச் சொல்ல வேண்டும் உங்களுக்கு உதவி கரமாக இருக்கும் என்ற முறையிலேதான் நான் அதைப்பற்றி கட்மோஷன் ஏற்கனவே கொடுத்திருக்கிறேன். இந்நேரம் உங்களுக்கு பர்டிகுலர்ஸ் வந்திருக்குமென நினைக்கிறேன்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தனித்தனி யாகச் சொல்லப்பட்ட புகார்கள் எல்லாம் குறித்து வைக்கப்படு கின்றன. அவைகளைப் பற்றியெல்லாம் தகவலறிந்து வேண்டு மானால் ஹாண்டே அவர்களுக்கத் தனியாகத் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொல்லி, தீ அணைக்கும் படை இந்த ஆண்டு 26 இடங்களில் அமைக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான இடங்கள் எல்லாம் பார்க்கப்பட்டு, இன்னும் ஆறு மாதக் காலத்தில் மேலும் 26 இடங்களில் வைக்கப்பட வேண்டும் என்ற அரசியல் அறிவிப்பு செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துக் கொண்டு இந்த மானியத்திலே நல்ல பல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக் கிறார்கள். இந்தத் துறையிலே உள்ள அதிகாரிகள் நல்ல