உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

காவல்துறை பற்றி

ஓருவர் மரணமடைந்து, இவர் உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்துச் செத்தார் என்ற அறிக்கை இங்கே படிக்கப்பட்டது. இது காவல்துறையில் போலீஸ் லாக்கப்பில் ஏற்பட்ட மரணம். அது கொலையா, அல்லது தற்கொலையா என்பது விசாரணையில் இருக்கிறது. ஆனால் போலீஸ் லாக்கப்பிலே ஒரு மரணம் சம்பவித்திருக்கிறது என்பதைக் கூற விரும்புகிறேன்.

அதைப்போல நெல்லிக்குப்பத்திலே சிதம்பரம் என்கிற கைதி காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்ற புகார் சம்பந்தமாக இங்கே ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ரெவின்யூ போர்ட் மெம்பர் விசாரணைக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று முதலமைச்சரவர்கள் உறுதியளித்தார்கள். இதுவே கழக ஆட்சிக் காலத்தில் நடைபெற்றிருந்தால் கருணாநிதிதான் அந்தச் சிதம்பரத்தைக் கொன்றார் என்று சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆட்சியிலே நடைபெற்றிருக்கின்ற காரணத்தால், அவை முன்னவர்களின் கருத்துப்படி ஆட்சியைப் பிடிக்காத சில அதிகாரிகள் ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த வேண்டுமென்று இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

மதுரை மாவட்டம் சின்னமனூர் காவல் நிலையத்தில் ஒச்சத்தேவர் என்பவர் காவல்துறையினரால் அடிக்கப்பட்டு மரணம் அடைந்ததாக இந்த அவையிலே ஒத்திவைப்புத் தீர்மானம் வந்தது அதையும் நாம் மறந்து விடுவதற்கில்லை.

கருமலைக்கூடல் போலீஸ் ஸ்டேஷனில் மேட்டூர் மில் தேசிய பஞ்சாலை முன்னாள் பொதுச் செயலாளர் சாமுவேல் என்பவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டு ஜூலை 10-ஆம் தேதி மரணம் அடைந்தார் என்ற புகார் ஏடுகளில் வந்தது.

திருவொற்றியூர் மணி 16-8-1977-ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டவர், காவலர்களின் தாக்குதல் காரணமாக சிறையில் இறந்திருக்கிறார் என்ற புகார் கூறப்பட்டு இங்கேயும் ஒத்தி வைப்புத் தீர்மானங்கள் வந்தன.

ஆகவே, இந்த 40, 45 நாட்கள் புதிய ஆட்சிக் காலத்திலேயே போலீஸ் லாக்கப் மரணங்கள் பற்றிய புகார்கள்