உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

காவல்துறை பற்றி

என்பது என்னுடைய வாதம். ஆனால் வழக்கிற்குள்ளே பூர்ணமாக நுழைய நான் விரும்பவில்லை. மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியில் பலர் வஞ்சம் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக சில காரியங்கள் நடைபெற்றிருக்கின்றன. குடியரசுத் தலைவர் ஆட்சியில் எப்படி எப்படி அப்ரூவர்கள் தயாரிக்கப் பட்டார்கள் என்பதை ஒரு அப்ரூவர் சாட்சியத்திலிருந்தே தெரிந்து கொண்டிருந்திருக்கலாம். அவர் அப்ரூவர் கூண்டில் ஏறியதும் என்ன நடந்தது என்பதைச் சொல்லி, எப்படி கையெழுத்து வாங்கினார்கள் என்பதையெல்லாம் தத்ரூபமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள். இப்போது கோர்ட்டை மாற்றலாமா என்றளவிற்கு பெட்டிஷன் போட்டிருக்கிறார்கள்.

இன்னொரு அப்ரூவருடைய பெயர் சந்தானம். அவர் சாட்சியம் கொடுத்திருக்கிறார். அதில் இன்றைய அமைச்சர் ஒருவரைப்பற்றியும் சொல்லியிருக்கிறார். அதை நான் நம்ப வில்லை. நம்பவும் மாட்டேன். அன்றைக்கு வேண்டுமென்றே அதிகாரிகள் இப்படி எழுதி வாங்கியிருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பஸ் முதலாளிகளிட மிருந்து வசூல் செய்து அந்தப் பணத்தை நானும் அதாவது சந்தான மாகிய நானும் மாப்பிள்ளை கோவிந்தசாமியும் கொண்டு போய் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனிடம் கொடுத்தோம் என்று அந்த சாட்சி சொல்லியிருக்கிறார். அவர் இப்போது அப்ரூவர், அவர் நாளைக்கு கூண்டில் வரத்தான் போகிறார். குடியரசுத் தலைவர் ஆட்சியில் தயாரிக்கப்பட்ட சாட்சி அவர். அவர் சொல்லியிருப்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயை வீரபாண்டி ஆறுமுகம் எப்படி வசூலித்திருக்க முடியும். எப்படி அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களிடம் கொண்டு போய்க் கொடுத்திருக்க முடியும். இது வேண்டுமென்றே அமைச்சரையும் சேர்த்து இழுக்க அவர் பெயரையும் பயன்படுத்தி, அன்றைய தினம் இருந்த அதிகாரிகள் இந்த வலையைப் பின்னியிருக்கிறார்கள். இப்படிப் பட்ட நிலையில்தான் இந்த வழக்கு தயாரிக்கப்பட்டு இருக்கிறது என்பதை மாத்திரம் இங்கே எடுத்துக்ாகாட்ட நான் கடமைப் பட்டிருக்கிறேன்.