உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

285

உரை : 12

நாள் : 17.03.1978

கலைஞர் மு. கருணாநிதி : பேரவைத் துணைத் தலைவரவர்களே, மன்றத்தில் வைக்கப்பட்டு, மன் உறுப்பினர்களுடைய ஒப்புதலைப் பெறுகின்ற வகையில் சற்றொப்ப ரூ.33 கோடி அளவிற்கு மானியம் பெறுகின்ற நிலையில் விவாதங்களுக்குட்பட்டு வருகின்ற காவல் துறை மானியத்தின்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, என்னுடைய கருத்துக்களைக் கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

நீண்ட நேரம் இந்த மானியத்தின்மீது நடைபெறுகின்ற

விவாதத்திலே என்னுடைய கருத்துக்களைக் கூறுவதற்கு இன்று ஏற்பட்டுள்ள தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் காரணமாக, நேரம் அதிகம் இல்லையென்ற காரணத்தினால் மிகச் சுருக்கமாகச் சிலவற்றை மாத்திரம் காவல்துறை பொறுப்பை ஏற்றிருக்கிற நம்முடைய முதல்வருடைய கவனத்திற்குக் கொண்டுவருவது என்னுடைய நீங்காக் கடமையாகும்.

நேற்று இங்கு உரையாற்றிய நண்பர் திரு. லத்தீப் அவர்கள். போலீஸ் கமிஷன் என்ற ஒன்று அமைக்கப்பட்டது, அது என்னவாயிற்று ? அது ஐஸ் பெட்டியிலே போடப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பினார். கழக ஆட்சியில் போலீஸ் கமிஷன் ஒன்று அமைக்கப்பெற்று அதிலே பங்குபெற்றிருந்தவர்கள் பல பரிந்துரைகளைச் செய்து, கழக ஆட்சிக் காலத்திலேயே 133 பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 40-க்கு மேற்பட்ட பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டன, நடைமுறைக்கு வந்தன என்பதை இந்த மன்றத்திலே ஆட்சி பொறுப்பிலேயிருந்த நேரத்திலும் சரி எதிர்க்கட்சி வரிசையிலேயிருந்து சென்ற கூட்டத்தொடரில் காவல் துறை மானியத்திலே விவாதம் நடைபெற்ற காலத்திலும் சரி நான் விளக்கமாக எடுத்துக்கூறி இருக்கிறேன்.