உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

காவல்துறை பற்றி

அதோடு, தரப்பட்டிருக்கிற அறிக்கையில் குற்றவாளி களுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அடிப்படையில் துப்பு துலக்கப்பட்ட வழக்குகள் எத்தனை சதவீதம் என்று வரும்போது 1976-ல் 52.4 சதவீதம் துப்பு துலக்கப்பட் டிருக்கிறது. 1977-ல் துப்பு துலக்கப்பட்ட சதவீதத்தின் அளவு 41.8 என்று அளவுக்குக் குறைந்திருக்கிறது. 1975-ல் அது இந்தக் குறிப்பில் இல்லாவிட்டாலும் 1975ஆம் ஆண்டு ஆய்வு அறிக்கையில் இருக்கிறது 58.9 என்ற அளவுக்கு துப்பு துலக்கப்பட்டிருக்கிறது. 1975-லே 58.6 சதவீதமாக இருந்தது 1976-ல் 52.4 சதவீதமாகக் குறைந்து, 1977-ல் இந்த ஆட்சிப் பதவிக்கு வந்த பிறகு 41.8 சதவீதம் என்று இந்தப் புள்ளிவிவரங்கள் குறைந்து இருப்பது உள்ளபடியே வருந்தத்தக்க ஒன்று என்று சுட்டிக்காட்டு கிறேன்.

அதைப்போலவே, ஆய்வு உரையில் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு, விசாரணை நடைபெறுகின்ற வழக்குகளின் எண்ணிக்கையில் துப்பு துலக்கப்பட்ட வழக்குகள் எத்தனை சதவீதம் என்பது 1976-ல் 70.7, 1977-ல் இப்போது அது 57.7 என்ற அளவுக்குப் படுபாதாளத்திற்கு வீழ்ந்திருக்கிறது. 1975 ஆம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 1975ஆம் ஆண்டு இப்படி துப்பு துலக்கப்பட்ட வழக்குகளின் சதவீதம் 73.1 ஆக இருந்திருக்கிறது. 1975-ல் 73.1 ஆக இருந்தது, 1976-ல் 70.7 ஆகக் குறைந்து 1977-ல் 57.7 ஆக குறைந்து இருப்பது மிக மிக வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.

5-ம் பக்கத்தில் ஆய்வு அறிக்கையில் ஒன்றுகூறப்பட்டிருக் கிறது. 1976ஆம் ஆண்டு இருந்ததைவிட 1977-ல் குற்றங்களின் எண்ணிக்கை 8,321 உயர்ந்துள்ளன. அதாவது 26.5 சதவீதம் உயர்ந்துள்ளது. 1972 ஆம் ஆண்டில் 3.1 சதவீதம்தான் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்தது. இதையும் கவனத்தில் கொண்டிட வேண்டும்.

1972 என்று குறிப்பிடுவதற்குக் காரணம் அதற்கு முன்பு நடந்த ஆட்சி நல்ல ஆட்சி என்றும் 1972-க்குப் பிறகு நடந்த ஆட்சிதான் விசாரிக்கப்பட வேண்டிய ஆட்சி என்றும் நம்முடைய இன்றைய அரசு கருதுகின்ற காரணத்தினால்தான். அதனால்தான்