290
காவல்துறை பற்றி
காவலர்களில் 32,621 பேர் என்று இருந்ததற்கு மாறாக 32,689 என்று - ஆக 68 பேர்தான் இரண்டாம் நிலைக்காவலர்களின் எண்ணிக்கையில் அதிகமாகி இருக்கிறார்கள்.
க
இதே நேரத்தில் இன்னொரு ஒப்பீட்டையும் நான் காட்ட விரும்புகிறேன். 1972-லே 38,541 ஆக இருந்ததை 10 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்கப்போகிறேன் என்று அறிவிக்காமலேயே கடந்த நான்கைந்து ஆண்டு காலத்தில் ஏறத்தாழ 8 ஆயிரம்பேர் காவல்துறையிலே அதிகமாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பத்தாயிரம் பேரை காவலர் வேலைக்கு எடுக்கப்போகிறேன் என்று அறிவித்த பிறகும் இன்றைக்கு இருக்கின்ற புள்ளிவிவரத்தைப் பார்த்தால் 200 பேர் கூட சரிவர எடுக்கப்படவில்லை என்கிற சோகமான புள்ளிவிவரத்தைத்தான் இந்த ஆய்வறிக்கையின் மூலமாக நாம் பெற முடிகிறது என்பதை என்னால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
இந்த ஆய்வறிக்கையைப் படிக்கும்போது நம்முடைய முதலமைச்சரவர்களுக்கு அதிகாரிகள் கடந்த கூட்டத்தொடரில் எந்த ஆய்வு அறிக்கையைத் தந்தார்களோ அதே அறிக்கையை அப்படியே எழுத்து பிசகாமல் இப்போதும் தந்துவிட்டார்களோ என்று எண்ணத்தான் தோன்றுகிறது.
1977-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-லே தரப்பட்ட அறிக்கையிலே இம் மாநிலத்தில் 873 காவல்நிலையங்களில் 756 காவல்நிலையங்களுக்கு தொலைபேசி வசதி செய்துதரப்பட் டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதற்கு 7 மாதத்திற்குப் பிறகு 1978ஆம் ஆண்டு மார்ச்சிலே அதாவது இப்போது வைக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயும் 873 காவல்நிலையங் களுக்கு 756 காவல் நிலையங்களில் தொலைபேசி வசதி செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.
873 காவல்நிலையங்களில் டெலிபோன் வசதி 756 காவல் நிலையங்களுக்கு செய்து தரப்பட்டுள்ளது என்று 1977லும் சொல்லப்பட்டது, 1978ல் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இடைக் காலத்தில் ஒன்றிரண்டு காவல் நிலையங்களிலாவது டெலிபோன் வசதி செய்து தருவதற்கான அந்த முயற்சி மேற்கொள்ளப் படவில்லை என்பதை நான் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியுமா என்பதை எண்ணிப்பார்த்திட வேண்டும்.