கலைஞரின் சட்டமன்ற உரைகள்
293
ஐயப்பாட்டுக்கு நாங்கள் இந்த ஆய்வு அறிக்கை மூலம் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஒரு கமிஷன் அமைத்துவிட்டு அந்தக் கமிஷ அமைக்கும்போதே முதல் கோணல் முற்றும் கோணல் என்பதைப்போல் நிகழ்ச்சி நடைபெற்ற அதேநாளில் நம் நிதியமைச்சர் அவர்கள், அவை முன்னவர் அவர்கள் சென்னையில் இருந்தவாறே ஒரு அறிக்கை விடுத்தார். காஞ்சி, மதுரை, திருச்சி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களுக்கு நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல் அமைச்சர் அவர்கள் சார்பாக நான் அறிவிக்கிறேன் என்று அவர்கள் அறிவித்து இது எல்லா ஏடுகளிலும் வெளிவந்து இந்து பத்திரிகையில்கூட முதல் பக்கத்தில் கட்டம் கட்டி போடப்பட்டு அதற்குப் பிறகு நிதி அமைச்சர் அறிவித்ததற்கு மாறாக நம் மாண்புமிகு முதல்வர் அவர்கள் சென்னையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு நியாயமானதா அல்லவா என்று அறிய மாத்திரம்தான் கமிஷன் என்று அறிவித்தார்கள்.
எனவே முதலமைச்சர் அவர்கள் சார்பாக நிதி அமைச்சர் அவர்கள், அறிவித்தது எல்லாம் ஏற்றுக்கொள்ளக்கூடியதா அல்லவா என்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் விரிவாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்றால், இந்த நிதி அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில், முதலமைச்சர் இல்லாத நேரத்தில் முதலமைச்சர் சார்பாக இரண்டு மூன்று அறிக்கைகளைக் கொடுத்திருக்கிறார்கள். அவைகள் எல்லாம்கூட முதலமைச்சர் சார்பாக கொடுக்கப்பட்ட அறிக்கைகள் தானா ? ஏற்கனவே நிதியமைச்சர் அவர்கள் ஒன்றைச் சொல்லி, மதுரை, திருச்சி, காஞ்சி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்திற்கு விசாரணை நடைபெறும் என்று சொல்ல, பின்னால் சென்னைக்கு மட்டும்தான் என்று முதலமைச்சர் அதற்கு முரண்பட்ட கருத்தை அறிவித்தார்கள்.
இவ்விதமான முரண்பட்ட கருத்துக்குப் பிறகு கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் அவையில் வைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கையில் போலீசார் செய்தது நியாயம் என்று குறிப்புகள் இருப்பது