உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

301

சட்டமன்ற உறுப்பினர் துணையோடு, அவரே நேரடியாக நின்று இடிக்கப்பட்டது என்பதைப்பற்றிப் பேசினார். அது குற்றமா குற்றம் அல்லவா என்பது எனக்குத் தெரியாது. மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் அதைப்பற்றி புகார்களை அனுப்பியிருப்பதாகத் தகவல், ஒரு அரிசன வீடு இந்த அளவுக்குப் படுமோசமாக இடிக்கப்பட்டிருக்கிறது.

அவர் எழுதிய கடிதத்தில் செங்கம் தாலுகா கரிமலப்பட்டி கிராமத்தில் சர்வே எண் 65-ல் மூன்று ஏக்கர் பஞ்சம தரிசு நிலம் பட்டா கொடுக்கப்பட்டது. அந்த நிலத்தில் ஒரு பகுதியில் வீடுகட்டிக்கொண்டு பயிர் செய்துவருகிறேன். எனக்கு எட்டு குழந்தைகள் இருக்கின்றன. 26-2-78 அன்று செங்கம் சட்டமன்ற உறுப்பினர் சில அடியாட்களோடு வந்து வீட்டை இடித்துவிட்டார் என்று சொல்லியிருக்கிறார்.

இடிபட்ட வீட்டினுடைய போட்டோவை அனுப்பியிருக் கிறார், அதைப்பற்றிய குற்றச்சாட்டைச் சொல்லியிருக்கிறார். இது எப்படி நடந்தது என்று விசாரித்து ஏற்ற நடவடிக்கை எடுக்கக்கூடியவர் நம்முடைய முதலமைச்சர் என்பதால் நான் அந்தப் படத்தையும் அரிசனத் தோழர் எழுதியிருக்கிற கடிதத்தையும் அவரிடத்திலே தருகிறேன்.

நண்பர் திரு. மாரிமுத்து ஆனாலும் சரி, திரு உமாநாத் ஆனாலும் சரி திரு ஜேம்ஸ் ஆனாலும் சரி, மற்றும் பேசிய தலைவர்கள் ஆனாலும் சரி அத்தனைபேர்களும் சட்டம் ஒழுங்கு அமைதியை காப்பாற்ற வேண்டும் என்ற பெயரால் ஆளுங் கட்சிக்காரர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டார்கள்.

என். ஜி. ஓ. வினர் போராட்டமானாலும், பல்லவன் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டமானாலும், அவைக ளெல்லாம் நடைபெற்றபோது ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிகுந்த முனைப்போடு ஈடுபட்டு வேலை நிறுத்தம் செய்தவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டார்கள். அதை போலீசார் தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலை இருப்பதால் என்.ஜி.ஓ.க்களால் பிடிக்கப்பட்ட ஒரு கார் போலி நம்பரோடு இருந்திருக்கிறது. அதிலே பயங்கரமான ஆயுதங்களும் சோடா