உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

காவல்துறை பற்றி

அதைப்போல கையை வேகமாக ஓங்கினாலும் கூட அடிக்கும் பொழுது மெதுவாகத் தட்ட வேண்டும். கொஞ்சம் வேகமாகக் காவல் துறையினர் தங்களுடைய சீற்றத்தைக் காட்டினாலும்கூட அதே காவல்துறையினர் - ஏற்கனவே ஒரு படமே வெளியிட்டார்கள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 'உங்கள் நண்பன்' என்ற படமே எடுத்து வெளியிட்டார்கள், - அப்படிப்பட்ட உங்கள் நண்பனாக இருக்க விரும்புகிறார்கள், அவர்கள் எப்பொழுதும் மக்களுடைய நண்பனாக இருக்க வேண்டும்.

ஆளுங்கட்சியாக இருக்கும் நேரத்திலேயும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்திலேயும் சரி, காவல் துறையினரின் கடமை உணர்வை நான் மறந்துவிடக்கூடியவன் அல்ல, அவர்களுக்கு இருக்கின்ற இன்னல்களை மறந்துவிடக் கூடியவன் அல்ல. அப்படிப்பட்ட பெரும் காவல் துறையைப் பெரும் பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருக்கின்ற நம்முடைய மாண்புமிகு முதலமைச்சரவர்கள் இங்கே எடுத்துச்சொன்ன குறைபாடுகளைக் களைவதற்கேற்ற வகையிலே காவல்துறையிலே திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை முடிக்கிறேன்.