உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

307

ஒப்பிட்டுப் பார்த்து, இங்கேகூட ஆளும் கட்சியினுடைய தோழமை கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், தலைவர்களும் பேசுகின்றபோது, சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு குற்றங்கள் குறைந்திருக்கிறது என்றும் பாராட்டினார்கள்.

ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளையும் கணக்கிலே எடுத்துக்கொள்வதற்கு பதிலாக, கடந்த நான்கைந்து ஆண்டுகளை கணக்கிலே எடுத்துக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தால், நான் தருகிற புள்ளி விவரங்கள் உண்மையை நிரூபிக்கும் என்று நான் நம்புகிறேன்.

வழிப்பறி என்ற தலைப்பில் எடுத்துக்கொண்டால் -

1973ஆம் ஆண்டு

13 வழிப்பறிகள்

17 வழிப்பறிகள் 130 வழிப்பறிகள்

ம்

1974ஆம் ஆண்டு

1975ஆம் ஆண்டு

1978ஆம் ஆண்டு

192 வழிப்பறிகள்

1979ஆம் ஆண்டு

254 வழிப்பறிகள்

என்கிற அளவிற்கு அந்த வழிப்பறி குற்றங்கள் உயர்ந்திருக்கின்றன.

கன்னக்கோல் களவு என்ற குற்றத்தினை எடுத்துப்

பார்த்தால்

1973ஆம் ஆண்டில்

6,891

1974ஆம் ஆண்டில்

7,717

1975இல் கழக ஆட்சிக்

காலத்தில்

7,387

1979இல் கழக ஆட்சிக்

காலத்தில்.

9,637

என்று உயர்ந்திருப்பதை பார்க்கலாம்.

"பெரிய திருட்டுகள் என்ற தலைப்பில்”

1973-ல்

19,463

1974-ல்

23.617

1975-ல்

22,537

1979-ல்

25,406