உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

309

58.9 சதவீதமாக இருந்த நிலை மாறி 26 சதவீதம் என்கிற அளவிற்கு காவல் துறையினுடைய கடமை உணர்வோ, அல்லது திறமையோ குறைந்துள்ளது என்கிற விகிதாசாரத்தைத்தான் இது காட்டுகிறது.

அடுத்து, தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகள், விசாரணை நடைபெறுகிற வழக்குகள் எண்ணிக்கையில், புலனாய்வு செய்யப்பட்ட வழக்குகள் எவ்வளவு சதவீதம் என்ற கணக்கை எடுத்துக்கொண்டால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1973ஆம் ஆண்டு 72.9 சதவீதம் என்றும், 1974-ல் 72.9 சதவீதம் என்றும், 1975-ல் 73.1 சதவீதம் என்றும் இருந்த நிலை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 1978ஆம் ஆண்டில் 47.2 சதவீதம் என்றும் 1979-ல் 47.6 சதவீதம் என்றும் குறைந்திருக்கிறது. இதுவும் காவலர்களுடைய கடமையுணர்ச்சியோ அல்லது திறமையோ குறைந்துள்ள விகிதாசாரத்தைக் காட்டுகிற கணக்கே தவிர வேறு அல்ல என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

திருட்டுச் சொத்துக்கள் மீட்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று பார்த்தால் விகிதாசார அடிப்படையில் 1973ஆம் ஆண்டு 49.7 சதவீதம், 1974-ல் 56.7 சதவீதம், 1975-ல் 56 சதவீதம், 1978-ல் 41.2 சதவீதம், 1979-ல் 41.9 சதவீதம் என்றளவிற்கு திருட்டுச் சொத்துக்கள் மீட்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பதை நான் இந்த அவையின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆய்வுரையில் அடிக்கடி ஆங்கில ஆய்வுரைக்கும் தமிழ் ஆய்வுரைக்கும் இடையே வேறுபாடுகள் வந்துகொண்டேயிருக்கின்றன. அதை நானும் சரி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் பேராசிரியர் அவர்களும் சரி பலமுறை எடுத்துக்காட்டியும்கூட ஏனோ அதிகாரிகள் தங்களை திருத்திக்கொள்ளத் தயாராகவில்லை. இங்கே கொடுத்துள்ள ஆய்வுரையில் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளதில் எட்டாவது பக்கத்தில் 1979ஆம் ஆண்டு சொத்து குறித்துப் பதிவான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 39,571 என்றுள்ளது. ஆனால் தமிழில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வுரையில் 38,671 என்றுள்ளது. இப்படி ஆயிரம் குற்ற வழக்குகளை ஒரேயடியாக ஆங்கிலத்திலிருந்து