கலைஞரின் சட்டமன்ற உரைகள்
327
எனவே அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் - தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளைப் போல் - காவல் துறையைப் பொறுத்தவரையில்கூட மறுக்கப்பட்டுவிட்டன. புறக்கணிக்கப்பட்டுவிட்டன. அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டன என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன்.
பல மானியக்கோரிக்கைகள் இருக்கின்ற காரணத்தால், கொஞ்சநேரம் அதிகம் எடுத்துக்கொள்ள அனுமதிப்பீர்கள் என்று கருதுகிறேன்.
தீயணைக்கும் படையைப் பொறுத்தவரையில், அந்த தீயணைக்கும் படையில் நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சியைப்பற்றி இங்கே காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் மாண்புமிகு திரு சுந்தரராஜ் அவர்கள் குறிப்பிட்டார்கள். அவர்களுக்கு நேரம் இல்லாத காரணத்தால் படுவேகமாக அதைச் சொல்லிச் சென்றார்கள். நம்முடைய முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு - அவருடைய உள்ளத்திலே பதியவைத்துக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையோடு விவரமாகச் சொல்லவிரும்புகிறேன்
-
இந்த தமிழ்நாடு தீயணைப்புத்துறை ஆய்வுரை அறிக்கையில் 7-ம் பக்கத்தில் 13-வது பாராவில் 'பயிற்சி' என்ற தலைப்பின் கீழ் சொல்லப்பட்டு இருப்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். தீயணைப்புத் துறைக்கென ஒரு மாநிலப் யிற்சிப்பள்ளி சென்னையில் சென்னையில் 2 நிலையத் தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் முன்னணி தீயணைப்பாளர்கள் உதவியுடன் ஒரு கோட்டத் தீயணைப்பு அலுவலரின் கீழ் செயல்படுகிறது
ப
நீங்கள் நன்றாக கவனிக்கவேண்டும். சென்னையிலே ஒரே ஒரு மாநிலப் பயிற்சிப் பள்ளி தீயணைப்புத் துறைக்கு இருக்கிறது... ஒரு மாநில பயிற்சிப் பள்ளி - ட்ரெயினிங் சென்டர் - சென்னையில் மாத்திரம்தான் இருக்கிறது. ஆனால் இந்த பயர்மேன் செலக்ட் செய்கிற அந்தத் தீயணைப்பு மண்டலங்கள் தமிழகத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மதுரை மண்டலம் என்றும், சென்னை மண்டலம் என்றும் இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. மதுரையில் தேர்வு ஆகிற - தேர்வு ஆகிற என்று சொன்னால், ட்ரெயினிங்கில் தேர்வு ஆகிறது என்பது அல்ல