32
காவல்துறை பற்றி
நான் அமைச்சர் அவர்களை ஒன்று கேட்டுக்கொள்வேன் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் போலீசார் வீட்டுப் பிள்ளைகள், சலுகைகளைப் பெற்று அந்தக் கல்லூரிகளில் அவர்கள் பயில்வதற்கான வசதிகளை அமைச்சரவை செய்து தரவேண்டுமென்று என் கோரிக்கையை நான் இந்த நேரத்தில் இங்கு எடுத்து வைக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். தொழிலாளர்களைப்போன்று ஏழு அல்லது எட்டு மணி நேரம் வேலை செய்யக்கூடியவர்கள் அல்ல இவர்கள். போலீஸ்காரர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள். அவர்கள் செய்யும் அதிக நேர வேலைக்காக ஓவர் டைம் அலவன்ஸ் எதுவும் அவர்களுக்கு கொடுப்பதாக தெரியவில்லை. அவைகளை போலீஸ் நண்பர்களுக்கு அளிப்பதற்கு இந்த அமைச்சரவை அக்கறை காட்டவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த சபையில் பணியாற்றிக் கொண்டிருக்கிற போலீஸ் நண்பர்களுக்கு ஒரு நாளைக்குத் தரப்படுகிற 10 அணா படி நான்கு மாதங்களுக்குப் பிறகு பில் அனுப்பபட்டு பிறகு 3 மாதங்கள் கழித்துத்தான் அவர்களுக்குத் தரப்படுகிற இந்த அவலநிலையைப் போக்குவதற்கும் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். விலைவாசி ஏற்றத்தால் போலீஸ்காரர்கள் எந்தளவிற்கு திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். போலீஸ்காரர்கள், நல்ல திடகாத்திரர் ளாக இருக்கவேண்டும். அவர்கள் நல்ல தேக வலிவு படைத்தவர்களாக இருக்கவேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல உணவு தேவை. ஆனால் அவர்களுக்குக் கிடைக்கிற ஏறத்தாழ 100 ரூபாய் வருமானத்தில் எப்படி அவர்கள் திடகாத்திரர்களாக இருக்க முடியும்? அமைச்சர்களுக்கு நினைவிருக்கும் என்று கருதுகிறேன். மாதர் மாநாட்டில் மந்திரிமார்களின் வீட்டில் உள்ள மரியாதைக்குரிய அம்மையார்கள் எல்லாம் கலந்து கொண்ட அந்த மாநாட்டில், ஒரு போலீஸ் அதிகாரியின் துணைவியார் பேசும்போது 1,500 ரூபாய் சம்பளம் வாங்கும் மந்திரிமார்களுக்கே இந்தக் காலத்தில் வாழ்க்கைச் செலவு கட்டி வரவில்லை என்று கூறினால், 65 ரூபாய், 70 ரூபாய் சம்பளம் வாங்கும் எங்கள் வீடுகளில் எப்படி செலவிற்குக் கட்டி வரும்? என்ற வினாவை போலீஸ் அதிகாரியின் துணைவியார் ஒருவர் அந்த மாதர் மாநாட்டில் எழுப்பியதை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். போலீஸ்காரர்கள் தங்கள் குறைகளை எடுத்துச்