உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

காவல்துறை பற்றி

எனக்குத் தெரியவில்லை. நான் சபாநாயகரைச் சொல்லவில்லை; தூதுவரைப்பற்றிச் சொல்கிறேன். எனவே, டில்லியிலே இருந்த தூதுவருடைய செலவு எல்லாம் இதிலே அடங்குமா, அடங்காதா ? தெரியாது. அந்த தூதுவர் இடம் காலியாக இருக்கிறது. வேறு தூதுவர்கள் அனுப்பப்படுவார்களா ? எப்போது ? அந்த தூதுவருக் குள்ள பணி நிலைமைகள் என்ன ? இவைகள் எல்லாம்கூட, மாநில, மாவட்ட பொறுப்புகள் பல துறை அமைச்சர்களிடம் அளிக்கப் பட்டிருந்தாலும், முழுவதையும் தன்னுடைய கையில் வைத்துக்கொண்டிருக்கிற முதலமைச்சர் இந்த அவைக்கு விளக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.

நம்முடைய அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். பொதுக்கூட்டங்களிலே பேசுகிறார்கள். சில நேரங்களில் நம்முடைய அரசாங்க நிகழ்ச்சிகளிலேகூட அரசியல் பேச வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுகிறது. நான் அவைகளுக்குள் எல்லாம் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை. ஏனென்றால் சில கடமைகளை உணர்த்தவும், பொறுப்புகளை உணர்த்தவும் அனைவரும் சேர்ந்து சமுதாய மாற்றத்திற்கு, இன்றைக்கு சமுதாயத்திலே இருக்கிற கேடுபாடுகளை களையவும் உறுதி எடுத்து பணியாற்றுகின்ற இந்த அவையில் இந்த முதல் கூட்டத்தொடரிலேயே நான் அவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுக்களை இங்கே வைக்க விரும்பவில்லை. ஆனால் எதையும் விட்டுவிடக்கூடாது என்பதற்காக பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.

சில அமைச்சர்கள் பேசுகிறார்கள். என்னுடைய அருமை நண்பர் இராஜாமுகமது அவர்கள்கூட ஒரு கூட்டத்தில் பேசியதாக அண்ணா பத்திரிகையில் வந்திருக்கிறது. அரசியலில் கருணாநிதி ஒதுக்கப்பட்டுவிட்ட ஒருவர் என்று சொல்லியிருக்கிறார். பரவாயில்லை. நான் ஒதுக்கப்பட்டுவிடலாம். ஒதுக்கப்பட்டு கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டியிலேகூட போடப்பட்டவனாகி விடலாம். ஆனால் ஒன்றை மட்டும் அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டியிலே போடப்படும் பொருள்கள்கூட சில நேரங்களில் கனகமணி மண்டபத்திற்கு வந்துவிடக்கூடும். அதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆக கவே, கொஞ்சம் அடக்கம் தேவை. வயதுக்குத் தகுந்த அல்லது அனுபவத்திற்குத் தகுந்த மரியாதையாவது கொடுக்க வேண்டும்.