உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338

காவல்துறை பற்றி

எப்படி 100 கோடி ரூபாயை உபரியாகத் தரப்போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றார்கள். அதற்கு நான் பதில் அளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

1988ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களையும், 1989ஆம் ஆண்டு இந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களையும் இந்த வருமான வகையில் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். 1988ஆம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரசுக்குக் கிடைத்த வருவாய் 16.85 கோடி. இந்த ஆண்டு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அரசுக்குக் கிடைத்த வருவாய் 22.18 கோடி. இதிலேயிருந்து கடந்த இரண்டு மாதங்களில் வருவாய் குறைவில்லை என்பது தெளிவாகத் தெரிவதோடு அதிகமாகக் கிடைத்து இருக்கிறது என்பது புரியும். இன்னும் சொல்லவேண்டுமேயானால், 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலே மதுவிலக்கு ஆயத் தீர்வையின் மூலமாக அரசுக்குக் கிடைத்த வருவாய், 1988-ல் 8.17 கோடி, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலே மாத்திரம். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிய அல்ல, 24 ஆம் தேதி வரை கிடைத்துள்ள வருவாய் 11.67 கோடி ரூபாய். இந்த மாதம், அடுத்த வாரத்திலே, 'இண்டெண்ட்' கொடுத்ததின் அடிப்படையில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற வருவாய் 31/2 கோடி. எனவே கடந்த ஆண்டு ஏப்ரல் திங்களில் கிடைத்தது 8.17 கோடி ரூபாய். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிடைக்கும் வருவாய் 15.17 கோடி ரூபாய். எனவே இழப்பு இல்லை. இழப்பு ஏற்பட்டுவிட்டதாக அவருக்குச் சொன்னவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பின் காரணமாக இத்தகைய கருத்தைச் சொல்லியிருக்கின்றார்கள் என்பதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)

மேலும் நேற்றைக்கு நண்பர் பீட்டர் ஆல்போன்ஸ் பேசும் பொழுது, இன்றைக்கு அவர் இல்லை, பேசிவிட்டுப் பதிலை எதிர்பார்ப்பார் என்று எதிர்பார்த்தேன். மற்றவர்கள் வந்து சொல்வார்கள் என்று அவர் வேறு வேலையாகச் சென்று இருப்பதாக அறிகிறேன். அவர்கள் சொன்னார்கள், மாதம் 40 இலட்சம் கேஸ் முன்பெல்லாம் மதுபானம் விற்றது, இப்போது இல்லையென்று சொன்னார்கள். அது தவறு. 4 லட்சம் என்பதைத் தான் அவர் அவசரத்திலே, யாரோ சொல்லி, குறித்துக் கொள்ளும்போது 40 இலட்சம் என்று குறித்துக் கொண்டிருக்கிறார் என்று கருதுகிறேன். மாதம் 4 இலட்சம்தான்.