கலைஞரின் சட்டமன்ற உரைகள்
343
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இதிலே இருந்து எந்த அளவுக்குத் தமிழகத்திலே இந்த சில்லறை விலை குறைவாக இருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
அது மாத்திரமல்ல. இப்படி விலை இங்கே குறைவாகவும், வேறு மாநிலங்களில், அண்டை மாநிலங்களில் எல்லாம் அதிகமாகவும் இருந்திருக்கிற காரணத்தால் இந்தப் பொருட்களை அங்கே கடத்திச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. சில்லறை விலையை நாம் ஓரளவுக்கு, மற்ற மாநிலங்களில் விற்கக்கூடிய அளவுக்குக்கூட இல்லாமல், ஏதோ ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என்ற அளவுக்குக்கூட பாட்டிலுக்கு உயர்த்தினால் நான் சொன்ன 130 கோடியோடு மேலும் 30 கோடி ரூபாய் - 30 கோடி ரூபாய் என்று நான் மிகக் குறைவாகச் சொல்கிறேன் - சேரும். எனவே 160 கோடி ரூபாய் மேலும் அதிகமாக இந்த ஆண்டு இந்தத் துறையிலே நாம் எதிர் பார்க்கலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
15 கோடி ரூபாய் இப்போதே நஷ்டம்; எனவே எதிர் பார்த்தது வராது என்றெல்லாம் சொல்வது இந்த அணுகு முறையின் காரணமாக இன்றைக்கு ஆத்திரப்பட்டுக் கொண் டிருப்பவர்களுடைய தவறான பிரச்சாரமே தவிர வேறல்ல என்பதை நான் இங்கே கூற விரும்புகிறேன்.
மது பானங்களுடைய மொத்த விலையையும் அல்லது அவர்களிடமிருந்து டாஸ்மாக் என்ற இந்த நிறுவனம் வாங்குகிற மொத்த விலையையும், டாஸ்மாக் நிறுவனம் சில்லறைக் கடைக் காரர்களுக்கு விற்கிற சில்லறை விலையையும் நிர்ணயிக்கும் அதிகாரத்தை மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை கமிஷனருக்கு வழங்கும் என்று இந்த மன்றத்தில் நான் எடுத்துக் கூறினேன். அதைத்தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களும் இங்கே நினைவுபடுத்தினார்கள். அதுபோலவே கமிஷனருக்கு இந்த அரசு உத்தரவிட்டு இருக்கிறது. அப்படி விலை நிர்ணயம் செய்யும்போது அவர்களோடு ஒத்துழைப்பதற்காக நிதித்துறை யிலே இருந்து ஒரு அதிகாரியும், ஆயத் தீர்வைத் துறை துணைக் கமிஷனரும்