கலைஞரின் சட்டமன்ற உரைகள்
349
நான்
ஆகவே, ஒத்துழைக்க மறுத்து, உற்பத்தியைக் குறைத்து, அரசுக்குச் சங்கடத்தை உண்டாக்கி, அரசை அவதிக்கு ஆளாக் ளாக்குவோம் என் று கருதுவார்களேயானால் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வேன், இதை வைத்து ஆகா, ஓகோ என்று சொல்லுகிறவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வேன். இது ஒன்றும் அரிசி அல்ல, இது இல்லாவிட்டால் (மேசையைத் தட்டும் ஒலி) மக்கள் பட்டினிக் கிடப்பார்களே என்று கருதுவதற்கு. இப்படி மிரட்டினால் பூரண மதுவிலக்கு வருகிறது என்று திரு. குமரி அனந்தன் கேட்டுக் கொண்டது போல “சொல்லி விடலாம்” (மேசையைத் தட்டும் ஒலி) அவ்வளவுதான். கவர்னர் ஆட்சியில் அவர்கள் மிரட்டினார்கள்.
Mr. SPEAKER : 'May' implies 'may not' also.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கவர்னர் ஆட்சியில் அப்படி மிரட்டிப் பார்த்தார்கள். அதன் காரணமாக அப்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு காம்பிரமைஸ் அவர்களிடத்தில் செய்து கொண்டு அதற்குப் பிறகு அவர்கள் ஒரு வழிக்கு வந்தார்கள். விலையைக் குறைத்தார்கள். அதன் மூலமாகக் குறைந்த அளவுதான் அப்போதிருந்த கவர்னர் ஆட்சியில் கிடைத்தது. இப்போது, அதுமட்டுமல்லாமல், அவர்கள் என்றைக்காவது இப்படிச் செய்யக்கூடும் என்று எதிர் பார்த்துதான் - இங்கே அதனை வரவேற்று நம்முடைய எதிர்க் கட்சித் துணைத் தலைவர் அவ கூட பேசினார்கள் நாங்களே இரண்டு பேக்டரிகளைத் தொடங்குகிற முயற்சிகளை இன்றைக்கு மேற்கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், அப்படி அந்த பேக்டரியிலே அந்தப் பணிகள் தொடங்குகிற காலக் கட்டத்தில் இடைவெளி 2 மாதம் அல்லது 3 மாதமானாலும் அதற்குள்ளே இடையிலே இவர்கள் ஏதாவது செய்தாலும்கூட
-
வெளி
மாநிலங்களிலிருந்து டெண்டர் கோரி, ரேட் கான்ட்ராக்ட் மூலம் பெறலாம் என்று கொள்கை விளக்கக் குறிப்பிலே குறிப்பிட்டிருந்தது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் திரு. திருநாவுக்கரசு இங்கே பேசும்போது வெளிமாநிலத்தி லிருந்து வரவழைத்தால் அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்று பேசமாட்டார்களா, உள்ளூரிலிருந்து பெறுவதை