உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364

காவல்துறை பற்றி

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : ஆனால் இதிலே தலைவராக இருக்கிற டாக்டர் ராமமூர்த்தி சொன்னார்; ஒன்று சொல்லி விடுங்கள், உயிர்ப் பாதுகாப்பு வேண்டுமானால், ஹெல்மெட் அணியவேண்டும். அதைப்பற்றிக் கவலையில்லை, என்றால் அதை அவர்கள் அணியாமல் இருக்கலாம் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதையும் கவனத்திலே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் ஹெல்மெட் அணிய விரும்பாதவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். எனவே அந்தத் தடை நீக்கப்பட்டுவிட்டது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னொன்று பல ஆண்டுக்காலமாகக் காவலர்கள் சந்தேக கேஸ்கள் போடுவது என்பது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதனால் பல நிரபராதிகள் அவதிக்கு ஆளாவது இந்த அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்ததின் பேரில், இனி சந்தேக கேஸ்கள் போடுவது என்பது அடியோடு ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

தமிழகம் எங்கும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக் டர்கள், தலமைக்காவலர்கள், காவலர்கள் ஆகியவர்களுடைய இல்லங்கள் 27,469 இல்லங்கள் இருக்கின்ற. அவர்களுடைய இல்லங்களிலே மின் விசிறி இதுவரையில் தரப்படவில்லை. நாங்களும் கட்டிக் கொடுத்தோம். அவர்களும் கட்டிக் கொடுத் தார்கள். இருந்தாலும்கூட அந்த 27,469 இல்லங்களில் ஒரு ஃபேன், மின் விசிறி கூட இல்லாமல் இருக்கின்றது. இதை ஒரு இரண்டு ஆண்டுத் திட்டமாக எடுத்துக்கொண்டு, இந்த ஆண்டிலே ஒரு பகுதியும், அடுத்த ஆண்டிலே ஒரு பகுதியுமாக இந்த 27,469 இல்லங்களுக்கும் மின் விசிறிகள் அமைத்துத் தரப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் (மேசையைத் தட்டும் ஒலி).

ஜீப்புகள் வழங்குவதைப் பற்றிச் சொன்னார்கள். தமிழ் நாட்டிலே மொத்தம் உள்ள காவல் கோட்டங்கள் 108. ஒரு காவல் கோட்டத்திற்கு ஒரு ஜீப் அளிக்கவேண்டும் என்பது அரசின் விருப்பம். இதுவரையில் ஜீப் அளிக்கப்பட கோட்டங்கள் 95. இன்னும் ஜீப் வழங்கப்படவேண்டிய கோட்டங்கள் 13 தான்.