கலைஞரின் சட்டமன்ற உரைகள்
367
எல்லாம் முடிக்கவேண்டுமென்று காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதுமாத்திரமல்ல, இந்த வரதட்சிணைக் கொடுமையை ஒரு நீண்டகாலத் திட்டமாக ஒழிப்பதற்குத்தான் பெண்களுக்குச் சொந்துரிமை வேண்டும் என்கின்ற ஒரு சட்டடத்தை இந்தக் கூட்டத் தொடரிலே இந்த அவையிலே கொண்டுவர இருக்கின்றோம். எனவே ஒரு நீண்டகாலத் திட்டமாக அந்தச் சட்டம் இங்கே நிறைவேற இருக்கிறது என்பதை மாண்புமிகு உறுப்பினர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.
மேலும் பல விவரங்களை எல்லாம், எத்தனை பெண்கள் என்று, அவர்களின் பெயர்களை எல்லாம் சொல்லியிருக் கிறார்கள். மீரா, திரிபுரசுந்தரி, கோவை நகரிலே ஷோபா, திருவொற்றியூரிலே கிருஷ்ணவேணி ஜலஜா என்று பெயர்களை எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அதேபோன்று பாப்பா உமாநாத் அவர்களும் திருவொற்றியூரிலே ராணியம்மாள் மகள் ஷோபா, திருச்சி சீனிவாச நகரில் மா. முத்து என்பருடைய மகள் பானுமதி, இவர்கள் எல்லாம் வரதட்சிணைக் கொடுமையால் இறந்திருப் பதைப்பற்றி எல்லாம் சொல்லியிருக்கிறார்கள். அதுபற்றி யெல்லாம் கவஸிக்கப்படும் என்ற உறுதியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று பேசும்போது சொன்னார்கள். சென்னை நகரத்திலே பல சீட்டுக் கம்பெனிகள் பொது மக்களிடமிருந்து பணம் வசூல் செய்து சீட்டு நடத்தி, காலக்கெடு முடிந்தவுடன் உரியவர்களுக்குப் பணத்தைத் திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னார்கள். அப்படி பெற்ற பணத்தை திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். அதிலே ஓரியண்டல் ஃபைனான்ஸ், சென்னை-6 ரூ. 92 இலட்சம் கையாடல் செய்திருக்கிறார்கள். ஜயசக்தி ஃபைனான்ஸ், சென்னை-17 ரூ. 22 இலட்சம் கையாடல் செய்திருக்கிறார்கள். தனலட்சுமி ஃபைனான்ஸ் அரும்பாக்கம் ரூ. 5 லட்சம் கையாடல் செய்திருக்கிறார்கள்.