உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

377

என்றைக்கும் நான் குறைத்து மதிப்பிட்டவன் அல்ல. இன்றைக்கு நம்முடைய வரதராசன் அவர்கள் பேசும்போது, கடைசியாக போனால் போகிறது என்று காவல்துறையிலே உள்ள அலுவலாளர்களுடைய நலன்களைப் பற்றி பேசினார்கள் என்றாலும்கூட, அவர்களுடைய மொத்தப் பேச்சைக் கவனிக்கும் போது காவல்துறை மீதே ஒரு வெறுப்பை அவர் மனதிலே தேக்கி வைத்துக்கொண்டிருக்கிறாரோ, அந்த அளவிற்குக் காவல்துறை அவரைப் போன்றவர்களுடைய உள்ளத்தைக் கெடுத்து வைத்திருக்கிறதோ, அப்படிப்பட்ட நினைவு அவருக்கு ஏற்படுவதற்குக் காவல்துறை காரணமாக இருந்திருக்கிறதோ என்று கூட நான் எண்ணியதுண்டு. ஆனால் நானும் சரி, மற்றவர்களும் சரி, காவல்துறையை இன்றைக்கும் காணுகின்ற நேரத்தில், இதிலே உள்ளவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்பதையும் எப்படி அரசு அலுவலாளர்களுக்காக நாம் இன்றைக்கு வாதாடுகிறோம். அரசு அலுவலாளர்கள் அனை வருமே நூற்றுக்கு நூறு பேர் நல்லவர்கள் என்று சொல்லி நாம் வாதாடவில்லை. ஆசிரியர்களுக்காக நாம் வாதாடுகிறோம், ஆசிரியர்கள் அத்தனை இலட்சம் பேருமே நல்லவர்கள் என்று சொல்லி அவர்களுக்காக நாம் வாதாடவில்லை. தொழிலாளர் களுக்காக நாம் வாதாடுகின்றோம். அந்தக் தொழிலாளர்களிலே ஒரு 10 சதவீதம் பேர், 20 சதவீதம் பேர் இன்றைக்கு தனிப்பட்ட முறையிலே அவர்கள் கடமை மறந்தவர்களாக, கண்ணியமற்ற வர்களாக இருக்கக் கூடும். இருந்தாலும் மொத்த சமுதாயத்திற்காக, பாட்டாளி சமுதாயத்திற்காக, வாதாடுகிறோம். அதைப்போலத் தான், ஆசிரியர்களிலே சில பேர் தவறானவர்கள் இருப்பதைப் போல, தொழிலாளர்களிலே சில பேர் தவறானவர்கள் இருப்பதைப் போல. அரசு அலுவலாளர்களிலே சில பேர் தவறானவர்கள் இருப்பதைப்போல, காவல் துறையிலும் சில பேர் தவறானவர்கள் இருக்கக்கூடும். நான் இல்லையென்று மறுக்கவில்லை. அதை மறுக்காத காரணத்தினாலேதான், வரதராசன் அவர்களே இங்கே எடுத்துக்காட்டிய பல சான்றுகளை, நானே சொன்ன பல சான்றுகளை இங்கே நான் மறுக்கவில்லை. காரணம், இதே அவையிலே நானே கூறிய ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டுக்கள் அவை. இவைகளை யெல்லாம் திருத்துவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நான் ஒன்றை இங்கே குறிப்பிட