கலைஞரின் சட்டமன்ற உரைகள்
389
கூடியவன், எனவே, நான் மாண்புமிகு முதலமைச்சருக்கு ஒன்றைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பொத்தாம் பொதுவாக கீழ் மட்டத்தில் இருப்பவர்களை சொல்கிறேன். மேல்மட்டத்தில் என்னைப் போன்ற ஒரு சிலர் இங்கே வந்து உட்கார்ந்துவிடலாம். ஆனால் கீழ் மட்டத்திலே, நடு மட்டத்தில் இருக்கக்கூடிய வர்களைப் பொறுத்தவரையிலும் எல்லா துறைகளிலும் ஒரு நியாய உணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இந்த அரசு என்று நான் சொல்லவேயில்லை. பொதுவாக நாட்டினுடைய நிலைமை அந்த வகையில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. இந்த அரசு என்று நான் சுட்டிக்காட்டவே இல்லை. இந்த அரசு செய்திருக்கிறது. அது இப்போது தான் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறது. வந்த 3 மாதத்திலேயே செய்திருக்கிறது. அதற்கு முன்பும் செய்திருக்கிறது. இங்கே நான் அதைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. நான் ஏதோ இந்த அரசை குற்றஞ்சாட்டுகிறேன் என்பதுபோல மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொன்ன தற்காக சொல்கிறேன். மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் கூட சொன்னார்கள். இந்த மாதிரி உணர்வு வரக்கூடாது. ஒரு குறிப்பிட்ட ஜாதிக்குதான் போட்டார்கள் என்ற உணர்வு வரக்கூடாது என்று சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் குறிப்பிட்ட ஜாதி என்று கருதி விட்டு விடவும், தள்ளிவிடவும் கூடாது. அது கடந்த காலத்தில் நடந்து வந்தது. அது இந்த ஆட்சிக் காலத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. ஆக, கடந்த கால நிலைமைகளை நான் இங்கே சுட்டிக் காட்டியாக வேண்டும் என்பதற்காகத்தான் எனது கருத்துக்களை சொன்னேனேயல்லாமல் வேறு ஒன்றும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே, வி. களத்தூரைப் பற்றி மாண்புமிகு உறுப்பினர் திரு. அப்துல் லத்தீப் அவர்கள் இங்கே சொன்னார்கள். அதிலே, மாவட்ட ஆட்சித் தலைவர், மற்ற அதிகாரிகள் எல்லாம் நடந்து கொண்ட நிலை சரியில்லை. அவர்களுடைய அறிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள இயலாது என்று குறிப்பிட்டார்கள். அந்த அறிக்கையை நான் படித்துப் பார்த்தேன். 28-4-1990 அன்று திருச்சியிலே வெளியான - ‘மாலை