உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

காவல்துறை பற்றி

சொல்லப்படுகிற அந்தநேரத்தில் பேசப்பட்டது. எல்லம்மாள் பற்றி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தனம் என்ற சிறுமியைப்பற்றி, இராதாபுரம் தொகுதியிலே விமலா என்ற பெண் இறந்தது குறித்து அம்மையார் அவர்களும் நம்முடைய ரமணி நல்லதம்பி அவர்களும் - இரண்டு பேர்களும் பேசி, நான் மறு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். எனவே, போலீசார் சார்பாக நான் அதை எதிர்க்கவில்லை. குற்றங்கள் சாட்டப் பட்டால் அதை மேலும் விசாரிக்க மறுவிசாரணை செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

மங்களம் தனராஜ் என்ற ஒரு போலீஸ் அதிகாரி பற்றி அம்மையார் அவர்கள் சொன்னார்கள். அவர்மீது திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி வட்டம், நாகல்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் புகார் செய்கிறார். தன்னை காவல்துறை ஆய்வாளர் மங்களம் தனராஜ் 7-6-1984 அன்று நடு இரவில் தன்னுடைய கற்புக்குப் பங்கம் விளைவித்துவிட்டார் என்று அவர் கொடுத்த புகாரின் பேரில் 31-8-1984-ல் விசாரணை நடத்தி, சேரன்மாதேவி சார் ஆட்சியர் விசாரணை நடத்தி, தனது அறிக்கையை அரசாங்கத்திற்கு 1984-ஆம் ஆண்டு தருகிறார். இந்தச் சம்பவம் நடைபெற்றது 1984-ல். அறிக்கை தரப்பட்டது 31-8-1984-ல். இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தரப்பட்டது. அவர்களுடைய விசாரணை அறிக்கையின் பேரிலும் உயர்நீதி மன்ற உத்தரவின் பேரிலும் அவர்மீது வழக்குத் தொடர இப்போது நாம் ஆணையிட்டிருக்கிறோம்.

இடையில் இருந்த அரசு டிபார்ட்மென்ட் நடவடிக்கை மாத்திரம்தான் எடுத்தது. அந்த டிபார்ட்மென்ட் நடவடிக்கையை எதிர்த்து அவர் நீதிமன்றத்திற்குச் சென்று மீண்டும் வேலைக்கு வந்துவிட்டார். அவரைப்பற்றிய புகார்கள் வந்தபிறகு 27-6-1989-ல் அவர்மீது கிரிமினல் வழக்குத் தொடர இந்த அரசு ஆணை யிட்டது. அவரைத் தற்காலிகப் பணி நீக்கம் இந்த அரசு செய்தது. செய்த பிறகு என்ன ஆனது? ஏனென்றால் 26-2-1990-ல் அவரைப் பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டோம். 1989-லே 6 மாதத்திலேயே கிரிமினல் வழக்கு அவர்மீது தொடர்ந்தோம். இதற்கு இடையிலே உயர் நீதிமன்றத்திற்கும் மேற்படி காவல்துறை கண்காணிப்பாளரால் தொடரப்பட்ட குற்ற வழக்கை 6-3-1990