உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

காவல்துறை பற்றி

போலீசாரையே கைது செய்து நடவடிக்கை எடுக்கின்ற அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதை நான் இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).

நம்முடைய நண்பர் திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் அவர்கள் இங்கே பேசும்போது காவல்துறையை நவீனமயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். காவல்துறையை நவீனமயமாக்குகின்ற அந்தத் திட்டம், அதற்கான முயற்சி 1974-ல் தான் தமிழ்நாட்டில் முதன் முதலாகத் தொடங்கப்பட்டது. அப்போது தகவல் தொடர்புகளைத் துரிதப்படுத்த நுண்ணலைக் கருவிகளையும், தொலைபேசி வசதிகளையும், போக்குவரத்துக்கு அதிகமான ஜீப்புகளையும் மோட்டார் சைக்கிள்களையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தோடு தொடர்பு கொள்ள மைக்ரோவேவ் சிஸ்டத்தையும் அப்போது தான் அறிமுகப்படுத்தினோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திட்டம் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு கடந்த 16 ஆண்டு களில் காவல்துறை, மற்ற தென் மாநிலங்களிலே உள்ள துறைகளை விட தமிழ்நாடு காவல்துறை மிகுந்த சிறப்போடு முன்னிலையில் இருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு கூட 55 இலட்ச ரூபாய் இதை நவீனப்படுத்துகின்ற காரியத்துக்காக ஒதுக்கப்பட்டு அது செலவழிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து நவீனப்படுத்துகின்ற திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் உதவி கேட்டு, அதற்கான திட்டங்களையும் அனுப்பி வைத்து இருக்கின்றோம். மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதி உதவியை வைத்து அந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர் திரு. பாலசுப்பிரமணியம் பேசும்போது மேலும் சொன்னார். கோவையில் நடைபெற்ற கொள்ளை பற்றிச் சான்னார். அதைக் காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் அவர்களும், நம்முடைய திரு. வரதராசன் அவர்களும் கூட இங்கே சுட்டிக் காட்டினார்கள். அந்தக் கொள்ளை வழக்கில் இரண்டு பேர் தாமதமாகச் சென்றார்கள் என்பதற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதிலே ஏற்பட்ட விபரீதம் என்னவென்றால், முதலிலே அவர்கள் அந்த டெலிபோனை