உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

காவல்துறை பற்றி

திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றுகூட அந்த இடத்திலே இருந்தது; ஆனால் இன்றைய தினம் அது அகற்றப்பட்டுவிட்டது என்பதை நான் முதல்வருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். (சிரிப்பு).

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : அப்படி மு யானால் அங்கே போயிருக்கிறார் என்று தெரிய வருகிறது. (சிரிப்பு).

திரு. எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் : நான் பச்சையப்பன் கல்லூரியிலே படித்தவன் என்றாலும் சேத்துப்பட்டு பக்கம் போய் நீண்ட நாட்களாகிவிட்டன.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : இன்னொரு குறையைக் கூடச் சொன்னார்கள். தீயணைப்புத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு மலிவு விலையிலே உணவுப் பொருள் வழங்குவதில் கடந்த ஆண்டில் 20 இலட்சம், 21 இலட்சம் என்று ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு 17.31 இலட்சம்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஏன் இந்தக் குறைவு என்று கேட்டார்கள். அந்தப் பக்கத்திலேயே வளைவுக் கோடுக்குள் போடப்பட் டிருக்கிறது. ஜனவரி மாதம் முடிய என்று போடப்பட்டிருக்கிறது. எனவே, ஜனவரி மாதம் முடியத்தான் 17.31 இலட்சம்; மார்ச் 1990 முடிய 26.01 இலட்சம் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கழக அரசு காவல்துறையிலே மாத்திரம் அல்ல, எல்லாத் துறைகளிலும் சொன்னதைச் செய்து வருகிறது என்பதை திரு. பீட்டர் ஆல்போன்ஸ் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் அவர்தான் அடிக்கடி சொன்னதைச் செய்தார்களா என்று இங்கே கேட்டுக் கொண்டிருப்பவர். கடந்த ஆண்டு காவல்துறை மானியம் விவாதிக்கப்படும்போது, 10 காவல் நிலையங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் என்று சொன்னேன். இப்பொழுது நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். 11 காவல் நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்பதை, (மேசையைத் தட்டும் ஒலி), குமரி மாவட்டத்திலே வெள்ளிச்சந்தை, குமரி மாவட்டத்திலே கதம்பமூடு, நெல்லை - கட்டபொம்மன் மாவட்டத்திலே கூடங்குளம், சிதம்பரனார் மாவட்டத்தில் தட்டார்மடம், செங்கை அண்ணா மாவட்டத்தில்