406
காவல்துறை பற்றி
செய்து தரப்படுகிறது. தமிழ்நாட்டிலே உள்ள மொத்தக் காவல் நிலையங்கள் 1,034. அதிலே புறநகர்க் காவல் நிலையங்கள் அதோடு சேர்த்து 202. இரண்டும் இணைந்து 1,236 காவல் நிலையங்கள் இருக்கின்றன. அதிலே தொலைபேசி வசதி செய்யப்பட்ட பெரிய, முழுக் காவல் நிலையங்கள் 966. தொலைபேசி வசதி இல்லாத காவல் நிலையம் 68. புறநகர்க் காவல் நிலையம் 20. இந்த 88 காவல் நிலையங்களுக்கும் தொலைபேசி வசதி செய்து தரப்படும் என்று கடந்த ஆண்டு அறிவித்திருந்தேன். அதற்கு இணங்க 74 காவல் நிலையங் களுக்கு தொலைபேசி வசதி முழுமையாக செய்து தரப்பட்டு விட்டது. மீதமுள்ள 14-ல் தான் கடந்த ஆண்டு அறிவித்த 11 புதிய காவல் நிலையங்கள் ருக்கிற காரணத்தால், அதற்கும் சேர்த்து இந்த ஆண்டு தமிழ்நாட்டிலே உள்ள எல்லாக் காவல் நிலையங்களும் தொலைபேசி வசதியை முழுமையாகப் பெறும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் ஜீப் வசதி, தமிழ்நாட்டிலே உள்ள மொத்த சப்-டிவிசன், காவல் உட்கோட்டங்களில் 108 உட்கோட்டங்களில் இதுவரை ஜீப் வழங்கப்பட்ட உட்கோட்டங்கள் 103. இன்னும் 5 உட்கோட்டங்கள், சப்-டிவிசனுக்கு ஜீப் இல்லை. இந்தக் குறையும் இந்த ஆண்டு நீக்கப்பட்டு, 5 ஜீப்புகளும் வழங்கப்பட்டுவிடும்.
மோட்டார் சைக்கிள், 1,034 பெரிய காவல் நிலையங்களில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்ட காவல் நிலையம் இதுவரை 892. வழங்கப்படாத காவல் நிலையம் 142. வரும் ஆண்டில் இந்த 142 காவல் நிலையங்களுக்கும் மோட்டார் சைக்கிள் வழங்கப் பட்டுவிடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மெஸ், காவல்துறை அதிகாரிகளுடைய மெஸ். வெளி யூரிலேயிருந்து காவல் பணிக்காக வருகிற அதிகாரிகள், வேறு மாநிலங்களிலிருந்து இங்குள்ளவர்களைச் சந்திக்க பணிநிமித்தம் வருகிற அதிகாரிகள், இவர்கள் எல்லாம் ஓய்வு எடுக்கவும், உணவு அருந்தவும் ஒரு தங்குகின்ற இடம் அவர்களுக்குச் சென்னையில் இல்லை என்ற குறையைப் போக்க, காவல்துறை அதிகாரிகளால் முறையிடப்பட்டு, 1987 ஆம் ஆண்டு