உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

435

அது மாத்திரம் அல்ல. இந்தப் போலிக் குற்றவாளிகளை உருவாக்க அந்த 6 காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டது அப்போதிருந்த போலீஸ் கமிஷனர்தான் என்றும், அந்த கமிஷனர் மீது ஒரு குற்றத்தைச் சுமத்தி, 5 இலட்சம் ரூபாய் அதற்காக அவர் பெற்றுக் கொண்டார் என்றும் திரு. ரங்கநாதன் அவர்கள் சொன்னார்கள். அதற்கான ஆதாரங்கள் இந்த அரசிடம் இதுவரை கிடைக்கவில்லை. மாண்புமிகு உறுப்பினர் ரங்கநாதன் அவர்களிடம் அதற்கான ஆதாரங்கள் இருந்து, அதை அரசிடம் கொடுப்பார்களானால், யாருக்கும் பயப்படாமல் அவர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). இந்த வழக்கிலேதான் ஆதி ராஜாராம், முன்னாள் அமைச்சர் எஸ். டி. சோமசுந்தரம் ஆகியோர் கைதாகி உள்ளார்கள். இது முழுக்க முழுக்க சி.பி.ஐ. நடத்துகின்ற வழக்கு. சி.பி.ஐ.க்குத் துணையாக, அவர்களுக்கு ஆதரவாக, அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, அவர்களுக்கு உதவியாக, இருக்கின்ற அந்தப் பணியைத் தான் தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.

மற்றொன்று, நேற்றைக்குப் பேசும்போது, திரு. ரங்கநாதன் தான் என்று கருதுகிறேன். எஸ்.பி.ஜி. என்று பிரதமருக்கு இருப்பதைப்போல, எஸ்.எஸ்.ஜி என்று ஒன்று இருக்கிறதே, அதை என்ன செய்தீர்கள் என்று கேட்டார். இன்னும் ஒன்றும் செய்ய வில்லை. இப்போதுதான் செய்யப்போகிறோம். பிரதமருடைய பாதுகாப்புக்கு எஸ்.பி.ஜி - Special Protetion Group என்று ஒன்று இருக்கிறது. ஆனால் பிரதமருடைய பாதுகாப்புக்குத்தான் எஸ்.பி.ஜி. என்ற ஒரு பெரிய குரூப் இருக்கிறதே தவிர இந்தியாவிலே எந்த மாநில முதலமைச்சருக்கும், பிரதமருக்கு இருப்பதைப்போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் கிடையவே கிடையாது கடந்தகால தமிழக முதலமைச்சர் ஒருவரைத்தவர, ஜெயலலிதா அவர்கள் 'இசட்' பிரிவிலே உள்ளவர்கள் 'இசட்' பிரிவுக்கு என்று தரப்படவேண்டிய பாதுகாப்பைப் பெற ஒரு அங்கீகரிக்கப்பட்ட பட்டியலே இருக்கிறது மூன்று இன்ஸ்பெக்டர்கள், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், இரண்டு தலைமைக் காவலர்கள், 20 காவலர்கள், இவைகள்தான் 'இசட்' பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள். ஆனால்,