438
காவல்துறை பற்றி
விமர்சனங்கள் எல்லாம் வந்தன என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எனவே அதைப்பற்றி ஆலோசித்துத்தான் செய்ய வேண்டும். இருந்தாலும் அந்த 50 ரூபாய் நமக்குக் கிடைக்காமலே வேற எங்கோ போய்க் கொண்டிருந்தது. அந்த 50 ரூபாயை நாம் கட்டணமாகப் போட்டாலும், வென்ட் ஃபீயாகப் போட்டாலும் விலை ஏறாது என்ற உறுதி உள்ள காரணத்தால் 50 ரூபாயைச் சேர்த்து 95 ரூபாயாக ஆக்கியிருக்கிறோம்.
ம
அதைப்போலவே, சர்க்கரைப்பிழிவு, கரும்பு பிழியும்போது ஏற்படும் கழிவுப்பாடு, 'மொலாசஸ்' அதற்கு 200 ரூபாய் சேவைக் கட்டணம் என்று வைத்திருக்கிறோம். முன்பு கட்டணமே இல்லாமல் அந்த 200 ரூபாயை சில பேர் பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி பங்கிடாமல் அதுவும் கருவூலத்திற்கு வர வழிவகைச் செய்து 65 பிளஸ் 10, 75 கோடி ரூபாய் ஆண்டு வருமானத்தை இந்த அரசு வந்ததும் வராததுமாக இந்த மூன்று மாத காலத்திலே பெருக்கியிருக்கிறது என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
கள்ளச்சாராயம் பற்றி எல்லோருக்கும் கவலை இருக்கிறது. கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியுமா என்பது நம் முன்னால் விசுவரூபம் எடுத்து இருக்கின்ற வினாக் குறியாகும். இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது பாராளுமன்றத்திலே மராட்டியத்தை சேர்ந்த ஒரு காங்கிரஸ் உறுப்பினரே பேசினார், அம்மையார் அவர்களே, தங்களுடைய கட் அவுட்டை வைத்து ஒயின் கடைக்கு விளம்பரம் செய்கிறார்கள் என்று. அவர்கள் ஆச்சரியப்பட்டுப் போய், அதிர்ச்சி அடைந்துபோய் தன்னுடைய கண்டனத்தை பிரதமர் இந்திரா காந்தி அவையிலேயே தெரிவித்தார்கள். அது மாத்திரமல்ல, குஜராத்திலே காந்தியடிகள் பிறந்த போர்பந்தர் கிராமத்திலேயே, காந்தியடிகள் பிறந்த வீட்டுக்குப் பக்கத்திலேயே பெட்ரோல் பங்க் போல கள்ளச் சாராய பங்க் வைக்கப்பட்டு இருக்கிற செய்தியும் சொல்லப்பட்டது, பாராளுமன்றத்தில். இதை எல்லாம் சொல்வதற்குக் காரணம், மது விலக்குக் கொள்கை வெற்றி அடைய முடியாத ஒரு கொள்கையாக இந்தியாவிலே இருந்து வந்து இருக்கிறது. ஆனாலும் கூட, மன அளவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியில் நாம் ஈடுபடுகிறோம். இந்த அளவிற்கு ஈடுபடா விட்டால் இன்னும்