கலைஞரின் சட்டமன்ற உரைகள்
43
அவர்களுக்குக் கூறிக்கொள்கிறேன். (சிரிப்பு). அடிக்கடி எங்கள் பேச்சை. . .
மாண்புமிகு திரு. எம். பக்தவத்சலம் : எங்கள் போலீஸ் சுருக்கெழுத்தாளர்கள் பலதரப்பட்ட பேச்சுக்களை எழுதுகிறார்கள். அவர்கள் எதற்கும் கட்டுப்பட மாட்டார்கள்.
கலைஞர் மு. கருணாநிதி : அவர்கள் கட்டுப்படாமல் இருக்க வேண்டுமென்றுதான் விரும்புகிறோம். ஆனால் கால வெள்ளம் யார் யாரையோ அடித்துக்கொண்டு போகிறது. கடைசியாக அமைச்சருக்கும் இந்தத் துறையினருக்கும் நல்லெண்ணத்தையும் பாராட்டுதலையும் தெரிவித்தாலும் முதல் அமைச்சருக்கு இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது, அத்தகைய பாராட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பக்கத்திலிருந்து வந்தால் தனக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சுகிறார், அப்படி அஞ்சத் தேவையில்லை என்று கூறி, சென்னை மாநகரத்தில் போக்குவரத்தில் 1350 வாடகை டாக்ஸிகளும், 251 ஆட்டோ ரிக்ஷாக்களும், 3,700 கை ரிக்ஷாக்களும், 1,004 சைக்கிள் ரிக்ஷாக்களும், 258 மாட்டு வண்டிகளும், 479 ஜட்கா வண்டிகளும், 1 லட்சம் சைக்கிள்களும் சென்னை நகரத்திலே சுற்றிக் கொண்டிருக்கின்றன என்ற புள்ளி விவரத்தை அறிகிறோம். இந்தப் போக்குவரத்தை சீர் செய்ய எல்லா வகையிலும் முறையான முயற்சிகளை போலீஸ் இலாகா எடுத்துக்கொண்டாலும் ஒரு விஷயத்தில் ஒரு யோசனை கூற கடமைப்பட்டிருக்கிறேன். சென்னையைக் சுற்றி இருக்கக்கூடிய ஆலைகளுக்கு, வேண்டிய நிலக்கரி வடக்கேயிருந்து வருகிறது. அந்த ஆலைகளுக்கு வருகிற நிலக்கரியை ராயபுரத்திற்கு கொண்டு வந்து குவிக்கிறார்கள். அங்கிருந்து 150 லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லும்போது பூந்தமல்லி, வால்டாக்ஸ் ரோடு வழியாக அந்த 150 லாரிகள் செல்லுகின்றன. வடக்கே இருந்து வரும் நிலக்கரி ராயபுரத்தில் சேமிக்கப்பட்டு அங்கிருந்து 150 லாரிகள் பூந்தமல்லி வழியாக, வால்டாக்ஸ் ரோடு வழியாகக் கொண்டு செல்லுவது போக்குவரத்துக்கு, அதுவும் நாமே வேண்டுமென்று தேடிக் கொள்ளும் இடைஞ்சலாக இருக்கிறது. இந்தக் போக்குவரத்து இடைஞ்சலைப் போக்கிக்கொள்ள வடக்கே