446
-
காவல்துறை பற்றி
மீதமுள்ள 1650 நபர்களிலும் முறைப்படி விண்ணப்பித்தால் காவலர்கள் பணிக்குத் தேவையான தகுதிகள் ஏதேனும் தளர்வு தேவைப்பட்டால், அவற்றைத் தளர்த்தி - பணி நியமனம் செய்ய இந்த அரசு ஆவன செய்யும் என்று இந்த மன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
-
காவல்துறையின் சீரிய, முறையான செயல்பாடுகளுக்குத் தேவையான எண்ணிக்கையிலே காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். இன்று, அங்கொன்றும், இங்கொன்றுமாக, மாத்திரமல்ல, பல இடங்களில்கூட வன்முறைச் சம்பவங்கள், திடீர் திருட்டுக்கள், கொள்ளைகள், கொலைகள் நடைபெறுகின்றன என்றால், போதுமான அளவிற்கு அளவிற்கு - 6 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில போதுமான அளவிற்கு - காவலர்களுடைய எண்ணிக்கை இல்லை. மக்களின் நலன் நாடி உழைப்பதே இந்த அரசினுடைய முக்கிய பணி என்ற அடிப்படையில் National Crime Records Bureau வெளியிட்ட "Crime in India, 1993" என்ற அந்த புத்தகத்தின்படி, அந்தப் புள்ளிவிவரத்தின்படி, மராட்டியத்தில் 1000 பேர்களுக்கு 1.6 என்ற அளவிலும், குஜராத்தில் 1000 பேர்களுக்கு 1.5 பேர் என்ற அளவிலும் தற்போது காவலர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தை எடுத்துக்கொண்டால், தற்போது 1000 பேர்களுக்கு 1.1 என்ற அளவிலேதான் காவலர்கள் இருக்கிறார்கள். வெளி நாடுகளில் 500 பேர்களுக்கு ஒரு காவலன் என்ற அளவிலே இருக்கிறது. தமிழகத்திலே 1.6 என்ற அளவிற்கு காவலர்களுடைய எண்ணிக்கையைப் பெருக்க - ஏன் இன்னும் சொல்லப் போனால், வரும் காலகட்டத்திலே 500 பேர்களுக்கு ஒரு காவலன் என்ற அளவிலே அந்த எண்ணிக்கையைப் பெருக்க, இந்த அரசு திட்டமிட்டு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). இப்போது இந்த 1.6 என்ற அளவிற்கு பெருக்கினால், 1 லட்சத்து 4 ஆயிரம் பேர்கள் காவல்துறையிலே இருக்கவேண்டும். தற்போது காவலர்களுடைய எண்ணிக்கை 83,991. கடந்த கால ஆட்சியிலே தேர்வு செய்து நியமிக்கப்படாமல் இருந்த 10 ஆயிரம் காவலர்களை நியமித்தால் 1.6 என்ற இலக்கை முழுமையாக அடைய முடியாது. எனவே, காவலர்கள், துணை ஆய்வாளர்கள் பிரிவிலே இந்த நடப்பாண்டிலே 5 ஆயிரம் பேரும், வருகின்ற நிதி ஆண்டிலே 5