448
காவல்துறை பற்றி
மாவட்டம், ஆவடி; திருச்சி பெரும்பிடுகு முத்தரையர் மாவட்டம், கே.கே.நகர், இந்த 12 இடங்களில் இது மிகக் குறைவான எண்ணிக்கைதான், ஆனாலும் 3 மாத காலத்திலே உள்ள நிதி வசதியைப் பொறுத்துதான் இதை அறிவிக்க முடிந்தது. ஆயிரத்து சொச்சம் காவல் நிலையங்கள் இருப்பது நிச்சயம் போதாது.
முன்
மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : பேரவையின் அனுமதியோடு பேரவையின் அலுவல் நேரம்
நீட்டிக்கப்படுகிறது.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : 500 பேருக்கு ஒரு காவலர் என்ற நிலை ஏற்பட வேண்டும் என்று எண்ணுகிற நேரத்தில் காவல் நிலையங்களுடைய எண்ணிக்கை போதாது. அந்த எண்ணிக்கையைப் பெருக்குகின்ற முயற்சியிலே அரசு ஈடுபடும் என்று குறிப்பிட்டு, தீயணைப்பு நிலையங்களைப் பற்றி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கடிதம் முலமாக என்னிடத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முறையீடுகளைச் சொன்னார்கள். 21 இடங்களிலே தீயணைப்புத் துறை மூலம் நிலையங்கள் அறிவிக்கப்படுகின்றன. திரு. ஆ.ஜெ. மணிக்கண்ணன் கேட்டதற்கிணங்க திருவெண்ணைநல்லூர், தமிழ்க்குடிமகன், அமைச்சரே கேட்டதற்கிணங்க ராஜசிங்கமங்கலம், ரவி, எம்.எல்.ஏ. என்ற முறையில் கேட்டதற்கிணங்க, ரவி அருணன் கேட்டதற் கிணங்க செங்கோட்டை, உறுப்பினர்கள் திருவாளர்கள் பாண்டுரங்கள் கேட்டதற்கிணங்க பெரணமல்லூர், ரவி அருணன் கேட்டதற்கிணங்க சுரண்டை, கே.ஆர். இராமசாமி கேட்டதற்கிணங்க திருவாடனை, சிவபுண்ணியம் கேட்டதற்கிணங்க கோட்டூர், வேல்துரை கேட்டதற்கிணங்க சேரன் மகாதேவி, மதிவாணன் கேட்டதற்கிணங்க அச்சிறுபாக்கம், அசோகன் கேட்டதற்கிணங்க கீவளூர், பி. கல்யாணம் கேட்டதற் கிணங்க குத்தாலம், இ. கணேசன் கேட்டதற்கிணங்க எடப்பாடி, ஜி. பழனிசாமி கேட்டதற்கிணங்க முத்துப்பேட்டை காயல், டாக்டர் ஞானசேகரன் கேட்டதற்கிணங்க மேல்மலையனூர், வே. கோவிந்தன் கேட்டதற்கிணங்க பேரணாம்பட்டு, அமைச்சர் பிச்சாண்டி கேட்டதற்கிணங்க வேட்டவலம், உறுப்பினர் ஆர்.ஆர். சேகரன்