452
காவல்துறை பற்றி
அந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன. இருந்தாலும், முழுமையாக காவல் துறை திருந்தி விட்டது என்று யாரும் ஒப்புக்கொள்ள இயலாது. ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில்தான் முதுகுளத்தூர் போன்ற பெரும் சாதிக் கலவரங்கள் எல்லாம் நடைபெற்று, ஒரு நாள் அல்ல, இரு நாள் அல்ல, ஒரு மாதக் காலம் முதுகுளத்தூர் பகுதியில் உள்ள வயல் வெளிகளில் எல்லாம் பிணங்கள் விழுந்த அந்தக் கோரக் காட்சியை நாம் இன்றைக்கும் எண்ணிப்பார்க்க இயலாத அளவுக்கு அந்த வரலாறு தமிழகத்திலே இன்னமும் பின்னிக் கிடைக்கிறது.
அதற்குப் பிறகு உங்கள் நண்பனாக இருப்போம் என்று அவர்களும், நாங்களும் உங்களுக்கு நண்பர்களாக இருப்போம் என்று பொதுமக்களும் சூளுரைத்துக் கொண்டு பழகினாலும்கூட, ஏதோ ஒரு இடைவெளி, காவல் துறைக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அண்மைக் காலத்தில், கடந்த ஆட்சிக் காலத்தில் காவல் துறை எந்தக் கட்டுப்பாட்டிற்குள்ளும் வைக்கப்படாமல் ஆளுங்கட்சிக் காரர்கள் இடுகிற கட்டளைகளை ஏற்று நடத்துகிற ஏவல் துறையாக காவல் துறை மாறியிருந்தது என்பதை இந்த அவையிலே உள்ள எதிர்க் கட்சிகளுடைய தலைவர்கள், உறுப்பினர்கள் யாரும் மறுத்திட இயலார் என்றே நான் நம்புகிறேன்.
கடந்த ஓராண்டு காலமாக மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நான் ஒரு கட்டத்திலே இங்கே சொன்னேன். காவல் துறை மிகவும் சீர்குலைந்து, ஒரு ஈரல் எப்படி 70 சதவீதம் அழுகிவிட்டால், கெட்டுவிட்டால் இருக்குமோ அதைப்போல ஆகிவிட்டது. மிச்சமுள்ள 30 சதவீதத்தை வைத்து இந்தக் காவல் துறையை சீர்படுத்தலாம் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டேன். ஆனால் இன்றைக்கு நான் சொல்ல விரும்புகிறேன், 70 சதவீதம் கெட்டு விட்ட அந்தக் காவல் துறையை கடந்த ஓராண்டு காலத்தில் இந்த அரசு எடுத்த முயற்சிகளின் காரணமாக அந்த ஈரல் 60 சதவீதம் நல்ல வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள 40 சதவீதத்தைப் பற்றித்தான் இங்கே எல்லோரும் பேசினார்கள். அது தமிழ் மாநிலக் காங்கிரஸ்