உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/457

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456

காவல்துறை பற்றி

காவலர், சாமுவேல் ஆகியோர் கைதுசெய்யப்பட்டார்கள். அதேபோல் வ.உ.சி. மாவட்டத்தில் கடம்பூர் காவல்நிலையத்தில் பெரிய தங்கவேலன் என்பவர் காவல் துறை விசாரணையின்போது மரணமுற்றார் என்ற செய்தியின் தொடர்பாக திரு. கோவிந்தன், பொறுப்பு ஆய்வாளர், ஒளிமுத்து, உதவி ஆய்வாளர், காளிமுத்து மற்றும் சீனியர் என்ற சீனிவாசன், காவலர்கள் ஆகிய 4 பேர்கள் மிது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலே இருக்கிறது. கைது செய்தவற்காக போலீசார் அவர்களைத் தேடுகிறார்கள். அவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் அப்படி கைது செய்யப்படாவிட்டால் அவர்களைத் தேடுவதாகச் சொல்லுகின்ற போலீசாரே ஒருவேளை உடந்தையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கும் வரும் என்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு நான் கண்டிப்பாகத் தெரிவித்திருக் கிறேன் என்பதையும் இந்த அவைக்கு கூறிக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.

ஜாதிக் கலவரங்களைப் பற்றி இங்கே பேசப்பட்டது. ஜாதிமதக் கலவரம் எவ்வளவு கொடுமையானது, தீவிரமானது என்பதை எல்லா உறுப்பினர்களும் இங்கே எடுத்துக் கூறி இருக்கின்றார்கள். அவர்களுடைய உணர்வில் இன்றல்ல. கடந்த பல மாதங்களாக இந்த அவை நடத்தப்படுகின்ற ஒவ்வொரு காலத்திலும் ஜாதிமத சங்கடங்களை, சச்சரவுகளை, மோதல்களைத் தவிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டும் என்ற கருத்தோடு நான் ஒன்றி இருந்திருக்கிறேன். அதற்கு நீங்களும் இந்த அரசுக்கு உதவியாக இருக்க வேண்டுமென்று அன்றைக்கும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்: இன்றைக்கும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். நான் இந்த எண்ணிக்கைகளை ஒப்பிட்டுக் காட்டுகின்ற காரணத்தால் நியாயம் கற்பிப்பதாக யாரும் கருதிக்கொள்ளக் கூடாது. 1995ஆம் ஆண்டில் ஜாதிக் கலவரத்தால் இறந்தவர்கள் 49 பேர். 1996 மே வரையில் இறந்தவர்கள் 27 பேர். ஆக 76 பேர் கடந்த காலத்திலே 1995-96ஆம் ஆண்டு மே வரையில் இந்த ஆட்சி வருவதற்கு முன்பு இந்தக் கலவரங்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள், செத்திருக்கிறார்கள். 1996 ஜூன் முதல் 1997 மார்ச் வரையில் 7 பேர்