உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

45

உரை : 3

நாள் : 11.03.1966

கலைஞர் மு. கருணாநிதி : மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே, இந்த போலீஸ் மானியத்தின் மீது, நண்பர் மதியழகன் தந்துள்ள வெட்டுப் பிரேரணையை ஆதரித்து என்னுடைய கருத்துக்களைக் கூற விரும்புகிறேன்.

எதிர்க்கட்சியிலே உள்ளவர்கள், போலீஸ் மானிய வெட்டுப் பிரேரணையின் மீது பேசுகிற காரணத்தினால், ஏதோ அந்த இலாகாவையே கண்டித்துப் பேசுவதாகவோ, அந்த இலாகா இருத்தல் ஆகாது என்ற எண்ணத்தில் பேசுவதாகவோ, ஆளும் கட்சி உறுப்பினர்கள் கருதிக்கொள்ளுவது நல்லதல்ல, பொறுப்புள்ளதல்ல என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த இலாகாவில் ஒரு சில அதிகாரிகள், அல்லது இலாகாவிலே இருக்கிற தனிப்பட்ட சிலர் அல்லது இலாகாவிலே இருக்கிற அதிகாரிகள் வேறு சிலருடைய தலையீட்டால், தவறுகள் விளைவிக்கத் தூண்டப்படும் நிலையில் இருக்கிறவர்கள் பற்றி எடுத்துச் சொல்வது அவசியம். அதற்காகவும்தான் போலீஸ் மானியம் இந்த சட்ட மன்றத்திலே விவாதத்திற்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்

இந்தப் போலீஸ் மானியத்தை இந்த மன்றத்தின் முன் வைத்த உள் துறை அமைச்சரவர்கள், போலீசார் இந்த மாநிலத்தில் செய்து வருகிற நல்ல பல பணிகளைப் பாராட்டி, நன்றியினைத் தெரிவித்தார்கள். அந்த நன்றி அறிவிப்போடு, எதிர்க் கட்சியினரும், அந்த இலாகாவைப் பொறுத்தவரையில், நன்றி அறிவிக்கத் தயங்கார் என்பதை எடுத்துக் கூற விரும்புகிறேன். போலீஸ் இலாகாவின் மீது எதிர்க்கட்சிக்கு நிச்சயமாக வெறுப்பு இல்லை. அதிகாரிகளானாலும், காவல் துறை வீரர்களானாலும், அவர்கள் பல வகையிலும், இந்த மான்யத்தின் மூலம், நன்மை வாய்க்கப்பெற சீரிய நற்கருத்துக்களை, வெட்டுப் பிரேரணைகள்