கலைஞரின் சட்டமன்ற உரைகள்
459
காலமாக இந்த நிதி நிறுவனங்கள் நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கின்ற காளான்களைப் போல ஆங்காங்கே திடீர் திடீரென்று முளைத்து - காளான்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது இன்றைய விஞ்ஞானக் கருத்து ஆனால், அந்தக் காளான்கள் பொதுமக்களுடைய பணத்தை சூறையாடி அவர்களை யெல்லாம், குடும்பம் குடும்பமாக நடுத்தெருவிலே நிற்க வைத்த காளான்கள். இந்தக் காளான்கள் 39 நிதி நிறுவனங்களாக தமிழகத்திலே, இந்த மாநிலத்திலே இருந்தன. அந்த 39 நிதி நிறுவனங்களையும், நம்முடைய காவல் துறை முயற்சி மேற்கொண்டு முடக்கியது மாத்திரம் அல்லாமல், அந்த நிதி நிறுவனங்களுக்குத் தொடர்புடைய 42 அதிபர்களையும் கைது செய்து சுமார் 170 கோடி ரூபாய் பொதுமக்களுடைய முடக்கப்பட்ட அந்தப் பணத்திலிருந்து ஏறத்தாழ 106 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும், பணத்தையும் மீட்கின்ற பெரும் பணியை செய்து முடித்திருக்கின்றது. அதை ஏன் அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கேட்டார்கள். சொத்துக்களைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன். வெறும் கேஷ், ரொக்கப்பணமாக இருந்தாலும்கூட, நீதிமன்றத்திலே சொல்லிவிட்டு திருப்பிக் கொடுத்திருக்க முடியும். ஆனால் அப்படி கொடுக்க முடியாத காரணம் - சொத்துக்களை நான் குறிப்பிட்டேன். அவற்றிலே பல வீடுகளாக, கட்டிடங்களாக, வேறு பல அசையா சொத்துக்களாக இருக்கின்ற காரணத்தால் நீதிமன்ற விசாரணை முடிகின்ற வரையிலே அதற்காக பொறுத்திருக்க வேண்டி யிருக்கிறது.
அந்த நிதி நிறுவனங்களுடைய பெயரை ஒருமுறை சொல்வது நல்லது என்று கருதுகின்றேன்.
1. அபிராமி ஹை இன்வெஸ்ட்மென்ட்ஸ்
2. அமுதா கோல்டு பேலஸ்
3. பாரதி ஜெம்ஸ் அண்டு ஜுவல்ஸ்
4. பெட்டர் கெய்ன்ஸ் பைனான்ஸ் அண்டு இன்வெஸ்ட்மெண்ட்ஸ்
5. கார் செண்டர் பைனான்ஸ்