உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/470

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

469

மதுவிலக்கு அமுல் பிரிவு மூடப்பட்ட பிறகு, அந்தந்தப் பகுதிகளிலே உள்ள காவல் நிலைய அதிகாரிகள்தான் மதுவிலக்குத் தொடர்பான பணிகளை நிறைவேற்றும் பொறுப்பிலே உள்ளார்கள். உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளும், காவலர்களும் தங்கள் பகுதியிலே சட்டத்திற்குப் புறம்பாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதையும், மதுபானங்கள் வாகனங்களிலே கடத்தப்படுவதையும், கண்காணித்துத் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், தவறுகள் நடந்தால் அந்தப் பகுதியிலேயுள்ள காவலர்கள்தான் பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டு, பத்திரிகைகளிலே விளம்பரங்கள், கால்பக்க விளம்பரங்கள் காவல்துறையினால் வெளியிடப்பட்டதையும் நீங்கள் பார்த்திருக்கக்கூடும். சென்னை நகரிலேயுள்ள காவல்துறைக்கு இதுபற்றி 12-9-1996, 8-10-1996, 17-10-1996, 26-2-1997, 10-3-1997 MIL 27-3-1997 கிய தேதிகளில் குறிப்பாணைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் 31-3-1997 அன்று, சென்ட்ரல் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த காவலர்கள், துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் புது வண்ணாரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலுள்ள, எண் 768, சக்தி அண்டு சரவணா மதுபானக் கடை எண் 16, பூண்டி தங்கம்மாள் தெருவிலுள்ள ஓம் சரவணா, மதுபானக் கடை மற்றும் எண் 750, திருவொற்றியூர் நெடுஞ்சாலையிலுள்ள ஓம் சக்தி அண்டு சரவணா மதுபானக்கடை ஆகிய மூன்று கடைகளைச் சோதனை செய்து, அங்கே 223 பாட்டில்கள், போலியாக லேபிள் ஒட்டப்பட்டு அதிலிருந்த சரக்கு உண்மையான சரக்கோ, போலியான சரக்கோ, கவலையில்லை ஒட்டப்பட்ட லேபிள், போலியான லேபிள் ஒட்டப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்து அந்த மதுபானக் கடைகள் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த மூன்ற மதுபானக் கடைகளுமே புது வண்ண காவல்நிலைய எல்லைக்குள் சுமார் 250 மீட்டர் முதல் 500 மீட்டர் தூரத்திலேதான் அமைந்துள்ளன. எனவே, அந்தப் பகுதியின் காவல்நிலைய ஆய்வாளருக்குத் தெரியாமல் அங்கே அந்த வியாபாரம் நடைபெற்றிருக்க முடியவே முடியாது, பலமுறை அறிவுறுத்தப்பட்ட