கலைஞரின் சட்டமன்ற உரைகள்
471
இதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று சொல்லிவிட்டுத்தான் இவைகளைப் படித்திருக்கிறேன். அதைப் போலவேதான், அன்றைக்கும், அந்த அறிக்கையை நான் படித்திருக்கிறேன். இந்தப் புகாரின்மீது, காவல்துறையினர் சிலரை அடித்ததாகத் தந்துள்ள இந்தப் புகாரின்மீது, ஆர்.டி.ஓ. விசாரணை ஒன்று இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைபெற்று முடிந்து, அதனுடைய விவர அறிக்கை மாவட்ட ஆட்சியாளருக்கும் அளிக்கப்படவிருக்கிறது. அந்த அறிக்கை வந்த பிறகு எந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமானாலும், தயங்காமல் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ய
திருவான்மியூர் காவல் நிலையத்தில் குணசேகரன் என்பவர் Illegal Custody-ல் வைக்கப்பட்டிருக்கிறார் என்று திரு. செல்லக்குமார் இங்கே சொன்னார். குணசேகரன் யார் என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் ஒரு பழைய குற்றவாளி. அடையாறு, சாஸ்திரி நகர் ஆகிய காவல்நிலையச் சரகத்தில் குற்றங்கள் இழைத்தமைக்காக ஏற்கெனவே இருபது முறை தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிதான் குணசேகரன் என்பவர். மேலும் அவர் குற்றங்கள் புரிந்தமைக்காக, 1993ஆம் ஆண்டிலும், அந்த ஆட்சிக் காலத்திலும், மற்றும் 1996ஆம் ஆண்டிலும் இரண்டு முறை 'குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ்' தலா ஓராண்டுக் காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நபர் அந்த குணசேகரன். அவரைத்தான் Illegal Custody-ல் வைத்திருப்பதாக நேற்றையதினம் இங்கே செல்லக்குமார் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
5-1-1997 அன்று பட்டினப்பாக்கம் காவல் நிலையச் சரகத்திலும், 11-1-1997 அன்று சாஸ்திரி நகர் காவல்நிலையச் சரகத்திலும் நடைபெற்ற திருட்டுக்கள் சம்பந்தமான இடங்களில் இந்தக் குணசேகரனுடைய விரல் ரேகை பதிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது தவிர, சாஸ்திரி நகரில் நடைபெற்ற மூன்று திருட்டுக்களிலும் அர் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இந்தத் திருட்டுக்கள் குறித்து விசாரிக்கவும், திருடப்பட்ட சொத்துக்களைக் கைப்பற்றவும் அவர் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரிக்கப்பட்டு, தற்போது கைதும் செய்யப்பட்டு, குற்ற எண் 85/97-ல்