உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

-

473

நம்முடைய உறுப்பினர் திரு. சொக்கர் அவர்கள் என்னிடம் ஒரு சிபாரிசுக் கடிதத்தைக் கொடுத்தார்கள். கோடம்பாக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஒருவர் - அவருடைய பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், அவர் யோக்கியமாக பிறகு நடந்து கொண்டார் அவர் சிலபேரைச் சேர்த்துக்கொண்டு ஒரு இடத்தில், யோகாசன ஆலயம் என்ற அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு அங்கே இப்படிப்பட்ட கேளிக்கையை நடத்திக் கொண்டிருந்தார். அதைப்பற்றி அந்த யோகாசன ஆலயத்தைச் சேர்ந்தவர்கள், திரு. சொக்கர் மூலமாக எனக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பினார்கள். “உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் இங்கே ஒரு ஒரு கூடம் கூடம் அமைத்துக் கொண்டிருக்கிறார், அது எங்களுடைய இடம் என்று கேட்டதற்கு, அவர் வெளியேற மறுக்கிறார். நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று கேட்டார்கள். அந்த வேண்டுகோள் என்னிடத்தில 20ஆம் தேதி தரப்பட்டது. 24ஆம் தேதி அந்த இடம் காலி செய்யப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). அதற்கு நன்றி தெரிவித்து யோகாசன ஆலயத்தை சேர்ந்தவர் எனக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதைப் படிக்கிறேன்:

"Respected Sir. On 20-3-1997. we submitted our prayers to you regarding trespassing and illegal occupation of our premises at No.7, Vanniyarpon Street, Choolaimedu, Chennai. Under Your guid- ance, the Police personnel have acted immediately, vacated the ille- gal occupation and restored our property back to us on 24-3-1997. On behalf of the President and Members of our Aalayam and on my own behalf we hereby convey our heartfelt thanks to you and the Police Department for the express action taken and rendering justice. Thanking you, Murugesapandiyan, General Secretary" என்று எழுதியிருக்கிறார்.

இதை நான் சொல்வதற்குக் காரணம் நன்றி தெரிவித்து விட்டார்கள் என்பதற்காக மாத்திரமல்ல. இதைப்போன்ற நன்றிகள் முதலமைச்சருக்கு வராமல், போலீஸ் துறையிலுள்ள அதிகாரி களுக்கும் வரவேண்டும் என்கின்ற அளவிற்கு அந்த அதிகாரிகள் நடந்துகொள்ள வேண்டும் என்கின்ற வேண்டுகோளையும் நான் இந்த அவையிலே வைக்க விரும்புகிறேன். (குறுக்கீடுகள்).