476
காவல்துறை பற்றி
என்று சொன்னதாகச் சொன்னார்கள். அவரே சொன்னார், வேறு வழியில்லாமல் இருதலைக்கொள்ளி எறும்பாக இருக்கிறார் முதலமைச்சர் என்று, அந்த நிலையையும் சொன்னார். எனக்காக இரக்கப்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலே திரு. சுப்பராயன் போல் இருக்கிறார்கள் என்கிற ஒரு நிம்மதி எனக்கிருக்கிறது. அதற்காக நான் ஆறுதல் அடைகிறேன். அவர் சொன்னார், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டாலும் என்மீது குற்றம் சாட்டுகிறீர்கள், நடவடிக்கை எடுத்து ஏதாவது நடந்துவிட்டாலும் நான் குற்றவாளியாக்கப்படுகிறேன். இந்த இரண்டுங்கெட்டான் சூழ்நிலையில், இரண்டும் கெடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நிலைமை எனக்கிருக்கிறது என்பதை நீங்கள் யாரும் மறந்துவிடக் கூடாது. ஏன் அப்படி அவர்கள் இருந்தார்கள் என்றால், அவர்கள் தலையிட்டிருப்பார்களேயானால், அந்தக் கலவரம் பெரிதாக வெடித்து இன்னும் பல இடங்களிலே பரவக்கூடிய சூழ்நிலை வரக்கூடும் ம் என்பதற்காகத்தான் அவர்கள் அவர்கள் கைக்கட்டிக் கொண்டிருந்திருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்
ஏன்
இன்னொன்றையும் திரு. சுப்பராயன் அவர்கள் சொன்னார்கள். தொழிலாளர்களுடைய கிளர்ச்சியில் போலீசார் ஏன் தலையிட வேண்டும்: ஏன் கைது செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். அப்படிக் கேட்டார்களென்றால், தொழிலாளர்களைக் கைது செய்கிறார்கள் என்ற ஆத்திரத்திலே கேட்டார்கள். அதுவும், எடுத்த எடுப்பிலே, ஏன் முதலாளிகளைக் கைது செய்யவில்லை என்றும் கேட்டார்கள். முதலாளிகளை கைது செய்தாலும் போலீசாரின் தலையீடு என்றுதானே அர்த்தம். ஆனாலும், நான் நேற்றையதினம், மாலையிலே போலீஸ் அதிகாரிகளை வைத்துக் கொண்டு பேசினேன். திரு. சுப்பராயன் அவர்களுடைய பேச்சின் அடிப்படையிலே அவர்களிடத்திலே பேசினேன். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் போலீசார், போலீஸ் பணிகளான அடிப்பது, உதைப்பது, துப்பாக்கிப் பிரயோகம் செய்வது, கண்ணீர்ப் புகை உபயோகிப்பது என்று மாத்திரம் அல்லாமல், போலீசாரும் அந்த மாவட்ட அதிகாரிகளைப் போல, அமைதியை நிலைநாட்டுகின்றவர்களைப்போல, நடந்து கொண்டு, அவர்களையெல்லாம் அழைத்து பேசி, சமாதானத்தை உருவாக்க முயலலாம், போலீஸ் அதிகாரிகளும் முயலலாம் என்று சொல்லி,