உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478

காவல்துறை பற்றி

அதற்கு ஆவன செய்யப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன். கொடியங்குளம் விசாரணைக் கமிஷன் அறிக்கை என்னவாயிற்று என்றும், சந்தானம் அவர்கள் கேட்டார்கள். கொடியங்குளம் சம்பவம் குறித்து, ஒரு தனி நபர் விசாரணைக் கமிஷன் அமைத்து, கடந்த கால அரசு விசாரணை செய்யத் தூண்டியது. ஆனால் அந்த விசாரணை போதுமானது அல்ல என்று பல கட்சிகளின் தலைவர்களும், பொதுமக்களும், நண்பர் கிருஷ்ணசாமி போன்றவர்களும் அன்றைக்குக் குரல் எழுப்பியதன் காரணமாக 27-6-1996 அன்று மத்திய அரசு தந்த ஒப்புதலின் அடிப்படையில், கழக அரசும், சி.பி.ஐ. அமைப்பதற்கு ஒப்புதலை அளித்து, 30-7-1996 அன்று சி.பி.ஐ.-யிடம் இந்த விசாரணை ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தற்போது சி.பி.ஐ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதால், கோமதிநாயகம் கமிஷன், பழைய கமிஷன், அதனுடைய அறிக்கையை வெளியிடுவது நல்லதல்ல என்ற முறையில், அந்த அறிக்கை வெளியிடப்படாமல் உள்ளது என்பதைத் தெரிவித்துக்

கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய உறுப்பினர் திரு. மணி அவர்கள் நேற்றைக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டு, ஏராளமான குறைகளைச் சொன்னார்கள். அவர் எப்பொழுதும் குற்றஞ்சாட்டிப் பேசுகின்றவர் அல்ல. அவருடைய வயதும், அவருடைய பண்பும், அனுபவமும் அப்படி. எனவே, அவர் ஏராளமான குறைகளைச் சொல்லி, அவைகளையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதை வைத்து நான் விசாரித்த அளவில், அவர் குறிப்பிட்ட கமலந்தேவி என்பவரை அவரது கணவர் கொலை செய்தது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எப்.ஐ.ஆருடன் சரி என்று சொன்னார். அதை விசாரித்துப் பார்த்ததில், இதுகுறித்து, குற்ற எண் 386/93, பிரிவு 302 இந்திய தண்டனைச் சட்டப்படி இவரது கணவர் லாரன்ஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். பிறகு, ஜாமீனிலே வெளிவந்து, தலைமறைவாகியிருக்கிறார் என்ற செய்தி எனக்குத் தரப்பட்டுள்ளது. அதைப்போலவே, அஞ்சுகிராமத்தில் நடந்த முவர் கொலை பற்றி நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எஃப்.ஐ.ஆருடன் சரி என்று சொன்னார். குற்ற எண் 483/96, பிரிவு 302. இந்திய