உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

காவல்துறை பற்றி

12 இடங்களில் இயங்கிவரும் புறக்காவல் நிலையங்களுக்கு புதிய காவல் நிலையங்கள் அமைப்பது குறித் அதற்கான அரசாணையும் அப்போதே வெளியிடப்பட்டு அமல்படுத்தப் பட்டுவிட்டது

மீண்டும் காவல் துறை இயக்குநர் அலுவலகம் மெரினா கடற்கரையில் உள்ள பழம்பெரும் கட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அன்றைக்குச் சொன்னேன். மெரினா கடற்கரையிலே உள்ள பழம்பெரும் காவல் துறை இயக்குநர் அலுவலகக் கட்டடத்தை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் மூலமாகப் புதுப்பிக்க ஒரு கோடியே முப்பத்தைந்து இலட்சம் ரூபாய்க்கு ஒப்பளிப்பு வழங்கப்பட்டு விட்டது, அதற்கான ஒப்பந்தப் புள்ளியும் கோரப்பட்டிருக்கிறது. இடையிலே வழக்கு ஒன்றிருந்தது. தொன்மையான அந்தக் கட்டடத்தை மாற்றக்கூடாது என்று ஒருவர் வழக்கு போட்டிருந்தார். அந்த வழக்கு முடிவதற்காக நாம் காத்திருந்து நாமே அதைப் பயன்படுத்தப்போகிறோம், அந்தத் தொன்மையானக் கட்டடத்தைப் பாழாக்கப் போவதில்லை என்று சொன்ன பிறகு அந்த வழக்கு முடிந்துவிட்டது. எனவே விரைவில் அந்தப் பணி ஆரம்பம் ஆகும்.

திரு. ப. சபாநாயகம் தலைமையிலே அமைக்கப்பட்ட போலீஸ் கமிஷனின் பரிந்துரைகளில் நிறைவேற்றப்படாத பரிந்துரைகள் மீது மேல் நடவடிக்கை எடுப்பது பற்றி குறிப்பிட்டிருந்தேன். அதில் 100 பரிந்துரைகள் செய்யப் பட்டிருந்தன, 100-வது பரிந்துரை 12 உட்பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. ஆகவே மொத்தம் 112 பரிந்துரைகள். அதில் 54 பரிந்துரைகள் மீது முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள பரிந்துரைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்

வன இலாக்கா தனிப் பிரிவைக் கலைத்துவிட்டு அவர்களை மற்ற காவல் துறை பிரிவுக்கு மாற்றுவது சம்பந்தமாக சொன்னேன். 25-10-96-ல் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிட்டது.