496
காவல்துறை பற்றி
திருநாவுக்கரசு வேண்டுகோளுக்கிணங்க அறந்தாங்கி, தீயணைப்பு நிலையம், ஆவுடையார் கோயில்;
அசோகன், திருவாரூர் வேண்டுகோளுக்கிணங்க வேளாங்கண்ணி;
இ.ஏ.பி. சிவாஜி வேண்டுகோளுக்கிணங்க பேரம்பாக்கம், எம்.ஜி.ஆர். மாவட்டம்;
குழந்தை தமிழரசன், விருத்தாச்சலம் வேண்டுகோளுக் கிணங்க மங்கலம்பேட்டை, தென்னாற்காடு வள்ளலார் மாவட்டம்; டி. மணி, விளவங்கோடு வேண்டுகோளுக்கிணங்க கொல்லங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்;
சிவபுண்ணியம், மன்னார்குடி அவர்களுடைய வேண்டு கோளுக்கிணங்க ஏ.டி. பன்னீர்செல்வம் மாவட்டத்தில் கூத்தாநல்லூர்;
தீரன் என்கின்ற இராசேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க பெரம்பலூர் திருவள்ளுவர் மாவட்டத்தில் செந்துறை;
ஆகவே காவல் துறையிலே ஆரம்பித்து, தீயை அணைக்கும் துறையிலே வந்து முடித்துவிட்டேன். தீ அணையட்டும் என்று கூறி இந்த அளவில் அமைகின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி). வணக்கம்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் : LD 600f 2-10 ஆகிவிட்டது. இனிமேல் ஒன்றும் கிடையாது. (குறுக்கீடுகள்). அதிகம் பேர் எழுந்து நிற்கிறீர்கள். எவ்வளவு சலுகைகள் முதலமைச்சர் அவர்கள் கொடுத்து இருக்கிறார்கள். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்களே. (குறுக்கீடுகள்). பாருங்கள், எத்தனை பேர்? (குறுக்கீடுகள்). முதலமைச்சர் அவர்களிடம் தனியாகக் கேட்டுக் கொள்ளுங்கள். (குறுக்கீடுகள்).
,
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, இராசிபுரத்தில் புறக்காவல் நிலையம் வேண்டுமென்று என்னிடம் கேட்கப்பட்டிருக்கிறது. என்னுடைய உரையில் அது விடுபட்டுவிட்டது. நிச்சயமாக அதையும் இந்தப் பட்டியலில் சேர்த்துக் கொள்கிறேன்.