கலைஞரின் சட்டமன்ற உரைகள்
மது
விலக்குச் சட்டத்தின் காரணமாகக்
49
கைது
செய்யப்படுகிறவர்களில் சாராயம் குடித்தவர்கள் அதிகமாகக் கைது செய்யப்படுகிறார்கள். அதே நேரத்தில், சாராயம் காய்ச்சிய வழக்குகள் அந்த அளவுக்கு இல்லை. இதைத்தான் கனம் உறுப்பினர்கள் பலர் இங்கே சுட்டிக்காட்டினார்கள். எதிர்க் கட்சிகளிலே உள்ளவர்கள் கொஞ்சம் வெளிப்படையாகச் சொன்னார்கள். ஆளும் கட்சியிலே உள்ளவர்கள், அவர்களால் சொல் முடிந்த அளவுக்குச் சூசகமாகத் தெரிவித்தார்கள். 'மாமூல்' என்ற முறை, இந்தச் சாராயம் காய்ச்சும் இடங்களுக்குச் செல்லுகிற போலீஸ்காரர்களை, நடுவிலே நந்தி போல் இருந்து, தடுத்து நிறுத்தி விடுகிறது என்ற நிலை இங்கே எடுத்து விளக்கப்பட்டது. மாமூல் அங்கு மட்டுமா?
பள்ளிக்கொண்டா என்கிற பகுதியினுடைய போலீ ஸ்டேஷன். பருகூர் என்கிற பகுதியினுடைய போலீஸ் ஸ்டேஷன். காவேரிப்பாக்கம் என்ற பகுதியினுடைய போலீஸ் ஸ்டேஷன். இந்த இடங்களில் எல்லாம் போகிற வருகிற லாரிகளின் மொத்த எண்ணிக்கை ஒரு நாளுக்கு சுமார் 600 இருக்கும். இந்த 600 லாரிக்காரர்களும் எந்தப் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றாலும், ஏதோ ஆண்டவனுக்குக் கும்பிடு போடுவது போல, போலீஸ் ஸ்டேஷனில் லாரி ஒன்றுக்குப் பத்து பைசா கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற ஒரு நியதி இன்றையதினம் இருக்கிறது. இதை நான் இங்கே வெளிப்படையாக எடுத்துச் சொல்லுகிறேன். அந்தப் பகுதியிலே இருக்கும் பல சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு இந்த உண்மை நிச்சயமாகத் தெரியும். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு நாளைக்குச் சுமார் ரூ.50, ரூ.60 வசூலிக்கப்படுகிறது. காஞ்சீபுரம் போகும் வழியில் - முதல் அமைச்சர் அவர்களும் பார்த்திருக்கக்கூடும்
ஒரு கோயில் வாசலில் கார் போகும் நேரத்தில் ஒரு சிறுவன் ஓடி வந்து உண்டியைக் குலுக்குவான். இஷ்டப்பட்டவர்கள் காசு போட்டு விட்டுப் போவார்கள். ஆனால், இது அப்படி அல்ல. கண்டிப்பாக நிற்கவேண்டும். போலீஸ் ஸ்டேஷனுக்கு முன் வண்டி நிற்க வேண்டும். பத்து பைசா கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும்.
3 - க.ச.உ. (கா.து.)