உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

503

கொள்ளலாம்' என்று குற்றப் புலனாய்வுத் துறையே முடிவு செய்து, அரசாங்கத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளது. Vigilance enquiry என்பது யார் மீது வேண்டுமானாலும் போட்டுவிடலாம். யார்மீது வேண்டுமானாலும் விஜிலென்ஸ் விசாரணைக்காக உள்ள ஒரு குற்றச்சாட்டை யாரும் ஒரு மொட்டைக் கடுதாசி மூலமாகக்கூட உருவாக்கிவிடலாம். அதற்காக யாரையும் பழிவாங்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அரசு இந்த நிலையை எடுத்திருக்கிறது என்பதை முதலிலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அந்த அடிப்படையிலேதான் இந்த விளக்கத்தை நான் தந்திருக்கின்றேன்.

மற்றொன்று, விபத்து ஏற்பட்டதாக Insurance பணத்தை ஏமாற்றிப் பெற்றுக்கொண்டார்கள். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்பது போன்ற ஒரு குற்றச்சாட்டை திரு. செல்லக்குமார் குறிப்பிட்டார். இது 1987, 1988 ஆம் ஆண்டு வாக்கில் நடைபெற்ற ஒன்று. சென்னை காவல் போக்குவரத்து புலன் விசாரணைப் பிரிவில் Traffic Investigation Wing விபத்து நடக்காமலேயே நடந்ததாக, காப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்டார்கள். இதுகுறித்து, பாலச்சந்திரன், கோட்டி சுப்பிர மணியன், ஜானகிராமன், தேவசகாயம், ராமசாமி, கன்னியப்பன், இராமய்யன் ஆகிய 7 பேர் மீதும் ஊழல் தடுப்புப் பிரிவும், C.B.I. விசாரணையும் 1993-லேயே C.B.I. விசாரணை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த C.B.I. விசாரணையின் காரணமாக உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, அதன் பிறகு அவர் நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி படிகளைப் பெறுகிறார். அவர் சஸ்பென்டு செய்யப்பட்டார். தீர்ப்பாயத்திலே, அவர் முறையீடு செய்து கொண்டு தீர்ப்பாயத்தினுடைய உத்தரவுப்படி பணியிலே இருந்து வருகிறார். உதவி ஆய்வாளர்கள் ஜானகிராமன், வி தேவசகாயம், தலைமைக் காவலர் ராமசாமி இவர்கள் Retiring age ஓய்வுபெறும் வயதை அடைந்துவிட்ட காரணத்தினால், அதற்குள்ளாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தச் சம்பவம் ஏதும் இப்போது நடைபெற்ற சம்பவம் அல்ல. இன்னொன்று, C.B.I. அறிக்கை அனுப்பினால், அதன்மீதுதான்