512
காவல்துறை பற்றி
இவ்வளவு பாதுகாப்பு இருந்தும்கூட அவர் கொல்லப்பட்டு ஒரு மூட்டையாகக் கட்டப்பட்டு அவருடைய உடல் டெல்லிக்கு அனுப்பப்பட்டது. மூப்பனாரும் மற்ற சில பேரும்தான் இருந்து அனுப்பி வைத்தார்கள், அன்றைக்கு அவர்களும்கூடப் போனார்கள். ஏன் முன்கூட்டியே முன்கூட்டியே உளவுத்துறை உளவுத்துறை இதைச் சொல்லவில்லை? எங்கே போனது உளவுத்துறை? பிறகுதான் விசாரிக்கிறோம் என்ன பண்ணியது உளவுத்துறை என்று. பிறகுதான் கமிஷன் போடுகிறோம். அதுமாதிரி எதுவும் மின்னல் வேகத்தில் நடந்துவிடும்போது, ஏன் முன்கூட்டியே செய்ய வில்லை, எங்கே போனது உளவுத்துறை என்று கேட்பதெல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகச் செய்யப்படுகிற, உஷார்படுத்துகின்ற காரியங்களாக இருக்கலாமே தவிர, அதையே ஒரு குற்றச்சாட்டாக வைத்துக்கொண்டு அதையே பேசிக் காண்டிருப்பது நியாயமில்லை என்பதற்காக இதைச் சொல்கிறேன். உளவுத்துறை சில நேரங்களில் நல்ல முறையிலே செயல்படுகின்றது. சில நேரங்களில் அவர்களையும் மீறி சில காரியங்கள் நடைபெற்று விடுகின்றன. எங்களுக்கு வந்த செய்திகளை வைத்துக்கொண்டுதான் அத்வானியைக் காப்பாற்ற முடிந்தது. நான் முதலிலே சொல்லும்போதுகூட அத்வானிக்கு மனித வெடிகுண்டு வரவில்லையென்ற செய்திதான் கோவையிலிருந்து வந்தது. பிறகு மெல்ல மெல்ல அந்தச் செய்திகள் புலன் விசாரணைக்காக விடப்பட்ட பிறகு, தனிப் பிரிவு அமைக்கப்பட்ட பிறகு, அத்வானியைக் கொல்வதற்காக மனித குண்டுகளுடன் சிலபேர் வரமுயன்றதாகவும், அவர்கள் அந்தக் கூட்டத்திற்குச் செல்ல முடியாமலேயே போலீஸ் பாதுகாப்பு இருந்ததாகவும் சொல்கிறார்கள். அந்தச் செய்தி வந்தது அதைத்தான் White paper-ல் இங்கே நான் வைத்தேன். அதையும் நீங்கள் தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொண்டிருப் பீர்கள். திரு அத்வானியை ஏன் காப்பாற்றினோம்? சில நேரங்களில், உளவுத்துறையானாலும் போலீஸ் ஆனாலும் சரியாகச் செயல்படும்போது பெரிய தலைவர்களைக் காப்பாற்றி விட முடிகிறது. மிகப் பெரும் தலைவர்களான உத்தமர் காந்தி, திருமதி. இந்திரா காந்தி, திரு. ராஜிவ் காந்தி இவர்களையெல்லாம் காப்பாற்ற முடியாமலே போய்விட்டது. இவைகளையும் நாம்