உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

519

எங்கே, எத்தனை மாநிலங்களில் மத்திய அரசுக்குச் சமமாக மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தைக் கொடுத்திருக் கிறார்கள்? சொல்லுங்களேன். எத்தனை மாநிலங்களிலே கொடுத்திருக்கிறார்கள்? கொடுக்கப்பட்ட மாநிலங்களிலே, அதே விகிதாசாரத்தை எத்தனை இடங்களில் ஆசிரியர்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள்? சொல்லுங்களேன் பார்க்கலாம். அது இல்லாத இடம் எத்தனை என்பதை அன்றைக்கே நான் பட்டியல் போட்டுக் காண்பித்திருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன், கோரிக்கையை நான் ஏற்றுக் கொண்டாகிவிட்டது கொள்கை ரீதியாக. அதிலே எந்தவிதமான மறுப்பும் இல்லை. ஒரேயொரு பிரச்சினை, அன்றைக்கே சொன்னேன். ஒரு சடங்கு, சம்பிரதாயம். பாக்கி இருக்கிற 3 கேட்டகிரியில் உள்ள பியூப்பிளையும் கூப்பிட்டு, அவர்களையும் அழைத்துப் பேசி, அதற்குப் பிறகு முடிவை அறிவிக்கிறேன் என்று சொன்னால், நீ முடிவு அறிவிக்கிறேன் என்று சொன்னதே தப்பு, நாங்கள் போராடித்தான் தீருவோம்; போராடித்தான் வந்தது என்று சொன்னால்தான் அதிலே எங்களுக்கு 'கிக்' இருக்கும் என்று சொன்னால், அதையெல்லாம் நான் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. அதைப்பற்றி அவ்வளவுதான் நான் சொல்ல முடியும்.

பிறகு நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன பல்வேறு பிரச்சினைகளைப்பற்றி இங்கே நான் பேச விரும்புகின்றேன். நேற்றைக்கே இதைப்பற்றியெல்லாம் அதிகாரி களோடும், துறைச் செயலாளர்களோடும் கலந்து பேசி பல அறிவிப்புக்களை இப்போது செய்ய இருக்கின்றேன்.

காவல்துறையை மேலும் வலுப்படுத்தவும், செம்மைப் படுத்தவும், நவீனப்படுத்தவும் வாகனங்கள், இயந்திரங்கள், புதிய காவல் அணிப்பிரிவுகள், கடலோர சோதனைச் சாவடிகள், கணிப்பொறிகள் பேப்பரே கூடாது என்று சொன்னாரே அதற்காகக் கணிப்பொறிகள் இவைகளுக்காக இந்த இரண்டு ஆண்டுகளிலே 47 கோடி ரூபாய் செலவு பண்ணியிருக்கிறோம். 1998-99-க்கு மேலும் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி). இஃதன்னியில் மத்திய அரசிடமிருந்து 10 கோடி ரூபாய்