உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

533

கருத்திலேகொண்டு, கள்ளச் சாராயத்தை ஒழித்து சமுதாயத்தில் ஏற்படும் பொருளாதாரச் சீர்கேட்டைத் தடுக்கும் நோக்கில், கள்ளச் சாராய ஒழிப்பு போன்ற வேலைக்கு சம்பந்தப்பட்ட பணிகளைத் தனித்து திறம்பட கவனிப்பதற்காக முன்பு இருந்ததைப் போலவே ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (மேசையைத் தட்டும் ஒலி). ஓராண்டு காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் காரணமாக மீண்டும் அந்தப் பிரிவு அமைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

விருதுநகரில் 31-3-1998 அன்று, மாவட்ட ஆயுதப்படை காலவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சுமார் 250 நபர்கள் காவலர்களுடைய சில பணிக்கால கோரிக்கைகளுக்காகத் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டார்கள், கட்டுப்பாடு உள்ள காவல்துறையில் இத்தகைய செயல்கள் ஏற்புடையது அல்ல என்பதால் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 27 காவலர்கள் விருதுநகரிலிருந்து பணி மாற்றம் செய்யப்பட்டார்கள். அதில் தற்போது 26 காவலர்கள் தங்கள் குடும்பத்தினர் சிலர், வேண்டாத நபர்களின் தூண்டுதலால் இச்செயலில் ஈடுபட்டதாகக் கூறி இந்தச் செயல்களுக்கு வருத்தம் தெரிவித்த மன்னிப்பும் கோரி, தங்களுக்கு வழங்கப்பட்ட பணி மாற்றத்தை ரத்து செய்து ஏற்கெனவே பணி செய்த இடத்தில் பணிபுரிய ஆணையிடுமாறு வேண்டிக்கொண்டார்கள். காவலர்களுடைய நலனில் எப்போதும் அக்கறை கொண்ட இந்த அரசு அவர்களுடைய கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் ஏற்று அவர்களுக்கு வழங்கிய பணி மாற்றத்தை ரத்து செய்து அந்தப் பணி மாற்றத்திற்கு முன்பு எங்கெங்கே பணிபுரிந்தார்களோ அங்கங்கேயே பணிபுரிய ஆணையிடப்பட்டுள்ளது. (மேசையைத் தட்டும் ஒலி).

தீயணைப்பு நிலையங்களைப் பலபேர் கேட்டிருக் கிறார்கள். ஒன்றுகூட கொடுக்கப் போவதில்லை. ஏனென்றால், முந்தைய ஆட்சிக் காலத்தில், 5 ஆண்டு காலத்திலே, 29 தீயணைப்பு நிலையங்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தி. மு. க. ஆட்சியில் இந்த இரண்டு வருடத்தில் 47 தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. (மேசையைத் தட்டும் ஒலி).