உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலைஞரின் சட்டமன்ற உரைகள்

535

ஆலங்குடி சுயேட்சை உறுப்பினர் வெங்கடாசலம் கேட்டது, (குறுக்கீடு). அவர் இன்று இல்லையா? அதை மாற்றிக் கொடுத்து விடலாம். (சிரிப்பு). அவர் கேட்டது. கரம்பக்குடியிலே; வாசுகி முருகேசன், கரூர் நகர் போக்குவரத்துக் காவல் நிலையம்; தீரன் ஆண்டிமடம், இரும்புலிகுறிச்சி, அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கெங்கவள்ளி; முகையூர் ஏ. ஜி. சம்பத் கேட்டது. விழுப்புரம் மாவட்டத்திலே கண்டாச்சிபுரம்; திருமங்கலம் முத்துராமலிங்கம் கேட்டது, மதுரை மாவட்டம் கூடக்கோயில்; ஓசூர் வெங்கடசாமி கேட்டது, தருமபுரி மாவட்டம், உத்தன்னபள்ளி; சோழவந்தான் லா. சந்தானம் கேட்டது, மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி.

புறக்காவல் நிலையங்கள் படிப்படியாக நிதி வசதிக்கேற்ப முழுக்காவல் நிலையங்களாக எல்லாப் புறக்காவல் நிலையங் களும் தரம் உயர்த்தப்பட இந்த ஆண்டு முதலே வேலை தொடங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தொகுதி உறுப்பினர் மணிவர்மா, தச்சம்பட்டில் காவல் நிலையம் வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் மூலமாகக் கேட்டார். அதனால் கொடுக்கப்படுகிறது. இதையே அவர் வழக்கமாக வைத்துக்கொள்ளக்கூடாது என்றுகூறி, மாண்புமிகு உறுப்பினர்கள் தங்களுடைய வெட்டுத் தீர்மானங்களைத் திரும்பப்பெற்று, மானியக்கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

திரு. இரா. தாமரைக்கனி : என்னுடைய தொகுதியில், மல்லியில் புதிய காவல் நிலையம் வேண்டுமென்று கேட்டேன். எல்லோருக்கும் கொடுத்து விட்டீர்கள். எனக்கு மட்டும் கொடுக்கவில்லை.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : 'பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே' என்ற அளவில் தரப்படும்.

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடல் நலிவுற்ற நிலையிலும், ஏறத்தாழ ஒன்றேகால் மணி நேரம் பதில் அளித்திருக்கிறார்கள்.